89

திரனை,  இந்திரன்  என்று   தெரிந்தே-தன்மீது  மோகம்   கொண்டு
தன்னை  அடைவதற்காக  மாறுவேடம் கொண்டு வந்தவன் இந்திரனே
என்று   நன்கு   அறிந்தே-அகலிகை  அவனை  வரவேற்று  அவன்
விருப்பத்தை  நிறைவேற்றித்  தானும்  மகிழ்ந்தாள் என்று  வான்மீகம்,
மூன்று  தெலுகு  ராமாயணங்கள், தொரவெ  ராமாயணம், எழுத்தச்சன்
ராமாயணம்  ஆகியன  கூறுகின்றன.  கம்ப ராமாயண  அகலிகைக்குக்
கௌதம    வேடத்தில்    வந்தவன்   இந்திரன்   என்று   முதலில்
தெரியவில்லை.    அவனை    அவள்   வரவேற்றதாகவும்   கம்பன்
கூறவில்லை.   எனவே,   கௌதமன்   என்றே   கருதி  வந்தவனின்
விருப்பத்திற்கு  உடன்பட்டிருக்கலாம்.  பின்னர் உறவின்போது  இவன்
கௌதமன்  அல்லன் என்று உணர்ந்தாளாயினும் இச்செயல்  தனக்குத்
தக்கதன்று   என்று   எண்ணவில்லை;   மாறாகத்  தானும்  விரும்பி
அவனுக்கு உடன்பட்டவளாக இருந்தாள் என்று கவிஞன் கூறுகிறான்.

வான்மீகி முதலானோர் காட்டும் அகலிகை  விரும்பியே  கற்பினை
இழந்தாள்  என்றும்,  கம்பன்   படைத்த  அகலிகை  வந்தவன்  தன்
கணவன் என்று கருதி உடன்பட்டாளாதலின் அகலிகையின்  கற்பிழப்பு
ஒரு விபத்து என்றும், அவள் வஞ்சமறியாத தூயவள்  என்றும், அவள்
கற்பரசி  என்றும்,  சில  அறிஞர்கள்  கருதுகின்றனர்;   “நெஞ்சினால்
பிழைப்பிலாள்”   என   வரும்  கம்பன்  தொடரை   இக்கருத்துக்குச்
சான்றாக்குகின்றனர்.22

கற்பென்பது  உடல்  தூய்மை  எனக்  கொண்டால்  இருவரும்  ஒரே
பண்பினர்தாம்;  உள்ளத் தூய்மை அதாவது, அறிந்தே உடல் தூய்மை
அழிய விரும்பாத பண்பு கற்பு எனக் கொண்டாலும்  இருவர்க்கிடையே
இன்றியமையாத   வேறுபாடு   இருப்பதாகத்   தெரியவில்லை.  ‘ஒக்க
உண்டிருத்தலோடும்’   என்னும்   தொடர்  இவளது  ஈடுபாட்டையும்,
‘உணர்ந்தனள்’  என்னும்  தொடர்  தன்  கணவனல்லன்  என்பதைத்
தெளிவாக  உணர்ந்துகொண்டாள்  என்பதையும்,  ‘தக்கதன்று  என்ன
ஒராள்’   என்னும்   தொடர்,   கணவன்   அல்லன்  தகாது  என்று
நினைக்கவில்லை   என்பதையும்   ‘தாழ்ந்தனள்   இருப்ப’  என்னும்
தொடர்,  பின்னும் விருப்புற்று அவனோடு உறைந்தனள்  என்பதையும்
தெளிவாகக்   காட்டுகின்றது.   எனினும்,  இருவகை  அகலிகையருள்,
இந்திரனைப்   பற்றி  அறிந்து,  அவனாலேயே  விரும்பப்படுகிறோம்
என்று   ஆணவமுற்று,  அவனை  விரும்பி  வரவேற்கும்   கீழ்மைப்
பண்பை உடையவளாக வான்மீகம் காட்டும் அகலிகை  விளங்குகிறாள்.
கணவனென்றே கருதி அனுமதித்த ஒருவன் கணவனல்லன், ஒரு


22. தெ. ஞானசுந்தரம், கம்பன் பலர் 1991 (கோவை: கம்பன் கழகம்)
    பக். 21-22