91

போன்ற  ஒப்பீட்டு  ஒழுகத்தையோ (Comparitive Morality)  கம்பன்
போற்றுவதாக   அவன்   காப்பியம்   வேறெங்கும்   காட்டவில்லை.
“அன்னை   நீ  போதுகென்னப்  பொன்னடி  வணங்கிப்  போனாள்”
என்னும்  பாடலோடு  கம்பன்  இந்தப்  படலத்தை முடித்திருக்கலாம்.
தன்  பாத்திரங்கள்  குற்றப்பட்டு நிற்குமிடத்துக் கம்பன் பெரும்பாலும்
கருத்துரைப்பதில்லை.        குற்றச்சூழலை        வருணிப்பதுடன்
நின்றுவிடுதலைக்  காண்கிறோம்.  வாலிவதையில்  இராமனின் மௌன
நிலை இங்குச் சிந்திக்கத் தக்கது.

இராமனைப்  பொருத்தவரையில் “என்னே இவ்வுலத்தியற்கை” என
இக்கதைத்    தொடக்கத்தில்    வியந்தவன்,    அவள்    கதையை
விசுவாமித்திரன்  கூறி  முடித்ததும், “மாதவன் கருணைக்குப் பத்திரம்
ஆகும்  வண்ணம்  நடந்து கொள்க. போய் வருக” என்று அவளுக்கு
அறிவுரை  கூறுவதைச்  சிந்தித்தால்,  அகலிகையின்  குற்றம்  பற்றிய
இராமனின் கருத்தும், கவிஞனின் கருத்தும் நன்கு தெளிவாகும்.

சாப - விமோசன முறைகளில் வேறுபடல்  

இந்திரனும்   அகலிகையும்   சபிக்கப்பட்ட   வரலாற்றிலும்   பல
வேறுபாடுகள்    காணப்படுகின்றன.    இந்திரன்  விருட்சணங்களை
இழக்குமாறு   சபிக்கப்பட்டதாக   வான்மீகி  ராமாயணம்  கூறுகிறது.
வடபுல,  தென்புல  வழக்குகள்  ஆகிய  இருவகை  வான்மீகங்களும்
இச்செய்தியை   ஒன்றுபோலவே   கூறுகின்றன.24   கம்பராமாயணம்,
“ஆயிரம்  மாதர்க்குள்ள  அறிகுறி  உனக்குண்டாக” என்று இந்திரன்
சபிக்கப்பட்டதாகக்  கூறி  வான்மீகத்திலிருந்து வேறுபடுகிறது.  கம்பன்
எதன்    அடிப்படையில்   இவ்வேறுபாட்டைச்   செய்தான்   என்று
தெளிவாக  அறிய  முடியவில்லை.  “இங்ஙனம்  சபித்ததாகக் கூறியது
பிறநூல்      மேற்கொண்டாகும்”       என்று      வை.      மு.
கோபாலகிருஷ்ணமாச்சாரியார் கூறுகிறார்.25 (a) ஆனால், இவர் கருதும்
பிறநூல் எதுவென்று அறிய இயலவில்லை. மூன்று


24. வடபுல வழக்கு : The Valmiki Ramayana Critical
                 Edition
 (Baroda M.S.University. 1959) Vol I
                  47:26, 27
    தென்புல வழக்கு : (1) Srimad Valmiki Ramayana Part I
                      (Gorakhpur: gitaPress. 1969) I. 48: 27,28

                    (2) Srimad Valmiki Ramayanam The
                      Dharamalaya Edition(Palghat,  Kalpathi:
                      Subrahmanya  vadhyar & sons. 1940) I.
                      48:30, 31

25. (a) கம்பராமாயணம் -  பாலகாண்டம்  9: 78, விளக்கவுரை.
        (ப.413)