தெலுகு ராமாயணங்களும், பிற வடமொழி இலக்கியங்களும் வான்மீகத்தைப் பின்பற்றியே இந்திரன் சாபத்தைக் கூறுகின்றன. கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் தோன்றிய அசாமிய ராமாயணம், விருட்சணங்களை இழப்பதோடு, உடலெங்கும் பெண்குறிகள் தோன்றுமாறும் இந்திரன் சபிக்கப்பட்டான் என்று கூறுகிறது.25(b) கி.பி. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னட தொரவெ ராமாயணம், உடல்முழுதும் பெண்குறியாக ஆகுமாறும், ஆண்மை இழக்குமாறும் இந்திரன் சபிக்கப்பட்டதாகக் கூறுகிறது. என்வே, முதலில் கம்பன் மட்டுமே இதில் மாற்றம் செய்துள்ளான் என அறிகிறோம். இனி இந்திரன் அகலிகையை விட்டுப் பிரியும்போது கௌதம வடிவுடன் சென்றான் என வான்மீகி முதலான நூல்கள் கூற, கம்பனோ ஒரு பூனை வடிவங்கொண்டு வெளியேறினான் என்று கூறுகிறான். நப்பண்ணனாரின் பரிபாடல் பத்தொன்பதாம் பாட்டு (50-52) கம்பன் இம்மாற்றத்தைச் செய்ய உதவியிருக்கலாம். அகலிகை பெற்ற சாபம் பற்றிக் கூறுகையில் வான்மீகி ராமாயணங்களே தம்முள் வேறுபடுகின்றன. ok;qH{kk fujkgkjk r.;Urh HLe‘kf;uh என்று பரோடா பல்கலைக் கழகத் திறனாய்வு பதிப்பான வான்மீகம் கூறுகிறது. தேவநகரி, சாரதா, தெலுகு, கிரந்தம், மலையாளம் மற்றும் நேவாரி ஆகிய எழுத்துகளில் பெயர்த்தெழுதப் பட்ட 86 ஏடுகளைச் சேகரித்து, அவற்றுள் 37 முழு ஏடுகளைக் கொண்டு ஒப்பிடப்பெற்று இந்தத் திறனாய்வுப் பதிப்பு வெளிவந்துள்ளது. இப்பதிப்பு வடபுலவழக்கு (Northern Recension) வான்மீகத்தின் சிறந்த வடிவமாகத் திகழ்கிறது. இனி இது பரோடாப் பதிப்பு என்று குறிக்கப்படும். ok;qH{kk fujkgkjk r.;Urh HLe‘kkf;uh என்று கோரக்பூர் கீதாபிரஸ் வெளிட்ட வான்மீகம் கூறுகிறது. இதில் தென்புல வழக்கு (Southern Recension) வான்மீகம். இனி இதனைக் கோரக்பூர்ப் பதிப்பு என்று அழைக்கலாம். ok;qH{kk f‘kykHwyk r.;Urh HLe‘kkf;uh என்று பாலக்காட்டில் பதிக்கப்பெற்ற வான்மீகம் கூறுகின்றது. இதுவும் தென்புல வழக்கு வான்மீகம். இது தர்மாலயாப் பதிப்பு என்று அழைக்கப்படுகிறது.
25. (b) Biswanarayan Shastri. 588. |