உட்கொண்டு வேறு உணவு எதுவுமின்றிப் புழுதிப் படுக்கையில் மனத்தவிப்புடன் கிடப்பாயாக” என்று அகலிகை சபிக்கப்படுகிறாள். தென்புல வழக்காக மேலே காட்டியபடி, “காற்றையே உட்கொண்டு கல்லாய்ச் சமைந்து....... கிடப்பாயாக” என்று சபிக்கப்படுகிறாள். வடபுல வழக்கு ஏடுகள் எல்லாமும், தென்புல வழக்கு ஏடுகள் சிலவும் ‘நிராஹரா’ என்று பாடம் கொள்ள, சில தென்புல வழக்கு ஏடுகள் மட்டும் ‘ஷிலா பூத்வா’ (கல்லுருவாய்} என்னும் பாடங் கொண்டிருப்பது ஏன் என்று இதுவரை நடந்துள்ள ஆய்வால் புலப்படவில்லை.27 ஆகவே, வான்மீகி இராமாயணத்தைப் பொறுத்த வரையில் வடபுல வழக்கின்படி உணவின்றிக் கிடந்தாள் என்றும், தென்புல வழக்கின்படி கல்லாகிக் கிடந்தாள் என்றும் இருவகையான கருத்துக்கள் காணப்படுகின்றன என அறிகிறோம். பிற வடமொழி நூல்களைப் பொறுத்த வரையில் காளிதாசரின் இரகுவம்சம் (கி. பி. 4ஆம் நூற்றாண்டு) முதன்முதலாக அகலிகை கல்லாய்ச் சபிக்கப்பெற்றாள் என்று கூறுகிறது. கி. பி. 5ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நரசிம்மபுராணம் அகலிகைப் ‘பாஷாணபூத’ (கல்லுருவானாள்) என்று குறிப்பிடுகிறது. கி. பி. எட்டாம் நூற்றாண்டில் எழுந்த குமாரதாசரின் ஜானகி ஹரணம் அகல்யா கல்லாக மாறினாள் (சருக்கம்3) என்று காட்டுகிறது.28 துளசிதாசரின் சமகாலத்தவரான காசி அத்வைத கவியால் கி. பி. 1608-இல் இயற்றப்பெற்ற இராமலிங்காம்ருதம்29 என்னும் நூல் அகலிகை தன் கணவனால் கல்லாகச் சபிக்கப்பெற்றாள் என்று கூறுகிறது. அத்யாத்ம ராமாயணம் வான்மீகத்தை ஒட்டிச் செல்கிறது. கம்பன் ‘கல், இயல், ஆதி’ (1, 9:22) எனச் சபிக்கப்பட்டதாகக் கூறுகிறான். மூன்று தெலுகு ராபாயணங்களும்; தொரவெ ராமா
27. பரோடா பதிப்பிற்குப் பின்னர்க் கிடைத்த மிகப் பழைய மலையாள ஏடு ஒன்றில் ( M9 கி. பி. 1416) என்ன பாடம் காணப்படுகிறது என்பது இன்னும் அறியப்படவில்லை. 28. Shankar Raj Naidu, 32-33, 35; A.N. Jani, Asian Variations in Ramayana. P.37. 29. இந்நூலின்படி இராமன் சீதையைத் தேடிக் காட்டில் அலையும்போது ஒரு கல்லின்மீது அவன் கால்பட்டதும் அகலிகை தன்னுருவம் பெறுகிறாள். அயோத்தியா காண்ட முடிவில் இந்நிகழ்ச்சி நடைபெறுவதாக இந்த நூல் கூறுவது புதுமையாக உள்ளது; வேறெங்கும் காணப்படவில்லை (சருக்கம்,6) |