குழந்தையை வெளியே எறிந்துவிடும் பணி மாரீசனுக்கு ஒப்படைக்கப்படுகிறது. அவன் அதை ஒரு பெட்டியில் வைத்து மிதிலை நகரப் பகுதியில் புதைத்துவிடுகிறான். ஏர் உழும்பொழுது நிலத்தின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தை ஜனகனிடம் சேர்ப்பிக்கப்பட, அவன் அதற்குச் சீதை எனப் பெயரிட்டு வளர்த்தான் என்று குணபத்ரரின் உத்தர புராணம் கூறுகிறது.33 தசக்கி்ரீவனுக்கு (இராவணன்) ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. அக்குழந்தையால் தசக்கிரீவனும் அரக்கர்களும் அழிவர் என்ற ஜோதிடக் கூற்றை யுட்கொண்டு ஒரு செப்புப் பெட்டியில் வைத்து மூடப்பெற்று அக்குழந்தை கடலில் விடப்படுகிறது. இந்தியக் குடியானவன் ஒருவன் அதைக் கண்டெடுத்து உள்ளே இருந்த குழந்தைக்குப் படசாலைக் குழந்தை ( Found in the furrow) என பெயரிட்டு வளர்த்து ரமணனுக்கு (இராமன்) அன்பளிப்பாகத் தர, அவன் அவளுக்குச் சீதாராணி என பெயரிட்டுத் தன் மனைவியாக்கிக் கொண்டான் என்று திபேத்திய ராமாயணமாகிய துன் ஹூவாங் கூறுகிறது.34 சனகன் யாகபூமியை உழுதுகொண்டிருந்தபோது, பாற்கடலில் அமுதத்தோடு பிறந்த இலக்குமியைப் போன்ற, அழகான ஒரு பெண் தோன்றினாள். சீதை என்ற பெயருடன் சனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள் என சதானந்தன் கூற்றாக வான்மீகத்தை ஒட்டிக் கம்ப ராமாயணம் கூறுகிறது. (1, 12: 17) கவாய் துவோரபி (GVAY DVORAHBI) என்னும் லாவோசிய ராமாயணத்தின்படி, இந்திரன் வடிவம் தாங்கிய இராவணன் இந்திரனின் பட்டத்தரசியான சுஜாதா என்பவளைக் கற்பழித்து விடுகிறான். அவனைப் பழி வாங்குவதற்காக சுஜாதா இராவணனின் மகளாக அவதரித்தாள். தன்னை அழிக்கப் பிறந்த குழந்தை என்று ஜோதிடர்களால் அறிந்த இராவணன் அக்குழந்தையை ஒரு தங்கப் பேழையில் வைத்து மூடிக் கடலில் விட்டு விடுகிறான். பரதகண்டமாகிய ஜம்புத் தீவில் வந்து கரை சேர்ந்த அந்தப் பேழையைக் காசப்பா என்னும் முனிவன் கண்டெடுத்துப் பேழையைத் திறக்க அக்குழந்தை தன் கைகளால் கண்களைக் கசக்கிக் கொண்டிருக்கக் கண்டு அதன் காரணமாகச் சீதை (சீ-கசக்குதல், தா-தன்கண்கள்) எனப் பெயாரிட்டு வளர்க்கிறான். மற்றொரு நீண்ட லாவோசிய ராமாயணமாகிய ‘பிரா லக் பிரா லாம்’ (Phra Lak Phra Lam) என்னும் காப்பியமும், ‘ராம் கியேன்’ (The Ramakien) என்னும் தாய்லாந்து இராமாயணமும் சீதை இராவண
33. idid P. 72 34. J.W. De Jong. “The story of Rama in Tibet”. Asian Variations in Ramayana, PP. 164-165 |