99

னின்  மகள்  என்று   மேற்கண்டவாறே   கூறுகின்றன.35  இந்திரன்
மனைவியேபழி   வாங்குவதற்காக  இராவணன்  மகளாகப்  பிறந்தாள்
என்று கம்போடிய ராமாயணமாகிய ரீம்கெர் (Reamker) கூறுகிறது.36

காஷ்மீரியில்     இராமாயண   நூல்கள்   சென்ற  நூற்றாண்டின்
இடைப்பகுதியில்தான்      தோன்றின.     எனினும்,    நாட்டுப்புறக்
கதைகளிலும்,  பாடல்களிலும்  இராமாயணக்  கதைகள்  மிக முற்பட்ட
காலத்தில்   இருந்தே   வழங்கி    வந்துள்ளன.   மக்களுடன்   மிக
நெருக்கமான  ஒரு கதைத் தொடராக இராமாயணம் காஷ்மீர  நாட்டில்
வழக்கில்  இருந்து  வந்துள்ளது. அதனால், இராமாயணத் தொடர்பான
சொற்கள் சில புதுப் பொருள்களைப் பெற்று வழங்குகின்றன. காட்டாக,
இராமாயணம்   என்ற  சொல்  காஷ்மீரி  மொழியில்,  ‘படத்  தகாத
துன்பங்களைக்  கூறுகின்ற ஒரு நீண்ட கதை’ எனவும் இராவுண் என்ற
சொல்,   ‘இராவணன்’   எனவும்,  ‘அழிந்துபோ’  எனவும்  பொருள்
படுகின்றன.   இராமாயணக்   கதை   என்றாலே  விருப்பமில்லாமல்,
அசிரத்தையாகக்   கேட்கத்   தக்கது   என்னும்   உணர்வு   பாமர
மக்களிடையே  நீண்ட  காலமாகப்  பரவியுள்ளது.  இந்தக் கருத்தைக்
கீழ்வரும் காஷ்மீரப் பழமொழியொன்று விளக்கக் காணலாம்.

இரவு  முழுவதும்  நான்  இராமாயணக்  கதையை விளக்கமாகச்
சொன்னேன்.  நீயோ  காலையில்  என்னைப் பார்த்து இராமனுக்குச்
சீதை என்ன உறவு என்று கேட்கிறாய்.37

காஷ்மீரி  மொழியில்   முதலில்   தோன்றிய  (கி. பி. 1843)  சங்கர
ராமாயணம்  (காண்டம் 1.  அத்தியாயம்  6.)  இராவணன்  மகளாகப்
பிறந்த சீதை  தீய  விளைவுகளைத்  தருபவள்  எனச்   சோதிடரால்
கூறப்பட்டமையால்   மிதிலை  நகர்ப்  பகுதியில்  புதைக்கப்பட்டாள்
என்றும்,  பஞ்சம் வந்த  காலத்தில்  வயலை  உழுது  கொண்டிருந்த
சனகனால்  கண்டெடுக்கப்பட்டாள்   என்றும்   கூறுகிறது.  அதனை
யடுத்துத் தோன்றிய  (கி.  பி.  1846)  மிகவும்  புகழ்பெற்ற பிரகாஷ்
ராமாயணம்   இராவணனுடைய  மகள்   ஒரு  பெட்டியில்  வைத்து
ஆற்றில்  எறியப்பட்டதாகவும்   அது  கரை   சேர்ந்தபோது   ஒரு
வண்ணான் அதைக் கண்டெடுத்துச் சனகனிடம் கொடுத்ததாகவும்


35. Kamala     Ratnam, “Socio-Cultural and Anthropological
background  of the Ramayana in Laos” OP. Cit. P. 236 and n. 10.

36.  F- Bizot, “The Reamker,” OP. Cit. P. 267.

37.  P.N. Pushp. 535.