100

கூறுகிறது.   விஷ்ணு,  பிரதாப்  ராமாயணம்  போன்ற  பிற  காஷ்மீர
ராமாயண   நூல்களும்  இவ்வாறே   இராவணனின்  மகளாகச்  சீதை
பிறந்தாள் என்று கூறுகின்றன.38

துளசி  ராமாயணம் சீதையை மாயா சக்தி, மற்றும் பிரம்ம சக்தியின்
அவதாரமாக  கூறுகிறது.  அசாமி  ராமாயணம்,  ஒரியா  ராமாயணம்,
குஜராத்தி  ராமாயணம்  ஆகியனவும்  அத்யாத்ம ராமாயணத்தையும்,
துளசி  இராமாயணத்தையும்  ஒட்டிச்  சீதையை  இலக்குமி  அல்லது
பிரம்ம சக்தியின் அவதாரமாகக் கூறுகின்றன.39

தொகுப்புரை

சனகனின் வளர்ப்பு மகள்:

இந்தியாவில்     வழங்குகின்ற  எல்லா  இராமாயண  நூல்களும்
இராமகாதை  நிகழ்ச்சியைப் பொருத்தவரை, சீதை சனகனின் வளர்ப்பு
மகள்   என்னும்    கருத்தில்   ஒன்றுபடுகின்றன.  மேலும்,  சனகன்
யாகபூமியை  வேள்விக்காக உழும்பொழுது கலப்பைக் கொழுவின்முன்
கண்டெடுக்கப்பெற்றாள் என்பதிலும் இவை ஒரே கருத்துடையனவாய்க்
காணப்படுகின்றன.

திபேத்திய    ராமாயணம் கடலிலிருந்து கண்டெடுத்த குழந்தையை
இந்தியக்   குடியானவன்   ஒருவன்  எடுத்து  வளர்த்தான்  என்றும்,
தாய்லாந்து  லாவோஸ்,  கன்போடியா ஆகிய நாட்டு இராமாயணங்கள்
கண்டெடுக்கப்பட்ட   குழந்தையை   ஜம்புத்தீவில்   உள்ள  காசப்பா
என்னும்  முனிவர்  சீதை  எனப்  பெயரிட்டு   வளர்த்தார்  என்றும்
கூறுகின்றன.

அவதாரப் பிறப்பு:

வான்மீகம்,  விஷ்ணு புராணம்,  கம்ப ராமாயணம்  ஆகியன சீதை
கருப்பையினின்று பிறவாதவள் (அயோனிஜா) என்று  கூறுகின்றன. இக்
கருத்தை   ஏற்றுக்கொண்டு   சில   இராமாயண  நூல்கள்  சீதையை
அவதாரப் பிறப்பு என்று கூறுகின்றன. முதன்முதலாகப்  பாகவதம்தான்
சீதை  இலக்குமியின்  அவதாரம்  என்று கூறுகிறது.  அதனையடுத்துக்
கம்பராமாயணமும்  சீதையை  இலக்குமி  அவதாரமாகக்  கூறுகின்றது.
துளசி   ராமாயணம்   சீதையை   மாயா  சக்தி   அவதாரனென்றும்,
பிரம்மசக்தி அவதாரம் என்றும்


38.  P.N.  Pushp, “Ramayana  in  Kashmiri  Literature  and
Folklore”, The Ramayana Tradition in Asia, P. 535.

39. vEck!lkn