101

இரு  வகையாகக்  கூறுகிறது. அசாமி ராமாயணம், ஒரியா ராமாயணம்,
குஜராத்தி ராமாயணம் ஆகியனவும் சீதையை இலக்குமி அல்லது சக்தி
அவதாரமாகப் படைத்துள்ளன.

இராவணனின் மகள்:

இனி,     பௌத்த,    ஜைன   இராமாயணங்களும்,   இவற்றின்
அடிப்படையில்  தோன்றிய அல்லது இம் மதக் கருத்துகளைச் சார்ந்த
தென்கிழக்காசிய     இராமாயணங்களும்     சீதையை     மானுடக்
குழந்தையாகப்     படைத்துள்ளன.    இவையெல்லாம்    சீதையை
இராவணனுக்கு    மண்டோதரியிடத்துப்   பிறந்த   குழந்தையாகவும்,
அக்குழந்தை  தீயவிளைவுகளை  உடையது  எனக் கணிக்கப்பட்டதால்
பெட்டியில்  வைத்து  எறியப்பட்டதாகவும்  காட்டுகின்றன.  வாசுதேவ
ஹிண்டி,  உத்தரபுராணம், துன் ஹூவாங், கவாய் துவாரபி, பிரா லாக்,
பிரா   லாம்,  ராம்கியேன்,  ரீம்கெர்,  சங்கர  ராமாயணம்,  பிரகாஷ்
ராமாயணம்   ஆகியன   இவ்வாறு  கூறுகின்றன.  இவற்றுள்  சமண
நூல்களாகிய   வாசுதேவ   ஹிண்டியும்,  உத்தரபுராணமும்  சீதையை
அவதாரமாகக் குறிப்பிடவில்லை.

இராமாயணப் பண்பாடு

அசோகன்  கலிங்கத்தை வென்றதைத் தொடர்ந்து முதன்முதலாகப்
பர்மா,  தாய்லாந்து  முதலிய பகுதிகளுக்குக்  குடியேறி ஒரியா நாட்டு
மக்கள்  தங்களுடன்  வான்மீகி  ராமாயணத்தை கொண்டு சென்றனர்
என்றும்  பின்னர்க்  கி.  பி.  ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இந்து
அரசர்கள்  இங்கே  நிறுவப்பட்டபோது,  பிற  இராமாயண நூல்களும்
புராணங்களும்   குடிபெயர்ந்தன   என்றும்,  இடைக்காலத்தே  கம்ப
ராமாயணமும்,  துளசி  ராமாயணம்  போன்றவையும் இந்த நாடுகளில்
பரவின  என்றும்  அறிஞர்கள்  ஆராய்ந்து  காட்டியுள்ளனர்.  இதன்
விளைவாகப்  பௌதத்தைத்  தங்கள்  சமயமாகக்  கொண்ட நாடுகள்
இராமாயணக்  கதையைத்  தம்  மொழிகளில் இயற்றும்போதும் இந்து
மதக்  கருத்துகளையும்,  பௌத்த  மதக்  கருத்துகளையும் இழைத்துப்
படைத்துள்ளனர்   என   அறிகிறோம்.  இந்த   அடிப்படையில்தான்
தென்கிழக்காசிய  இராமாயணங்கள்  எல்லாம்  சீதை மண்டோதரியின்
குழந்தை    என்ற   மானுடப்   பிறப்புக்   கோட்பாட்டை   ஏற்றுக்
கொண்டபோதிலும்,  முற்பிறவியில்  இந்திரனாகவும்,  வேறு உருவிலும்
இராவணன்   ஒரு  பெண்ணுக்குத்  தீமை  இழைத்ததன்  காரணமாக
அப்பழியைத்    தீர்த்துக்    கொள்வதற்காகவே    அந்தப்   பெண்
இராவணனின்   குழந்தையாகப்   பிறந்தாள்   என்னும்  மறுபிறப்புக்
கோட்பாட்டையும்    கலந்து    தங்கள்    ராமாயண   நூல்களைப்
படைத்துள்ளன. ராம்கியேன்,