102

ராம்கீர்த்தி,     ரீம்கர்,  பிரா லாக்,  பிரா  லாம்,  கவாய்,  துவாரபி,
காஷ்மீரி  இராமாயணங்கள்  ஆகியன  யாவும்  மேற்கண்டவாறு இரு
சமயக்   கோட்பாட்டையும்   உட்கொண்டனவாய்   அமைந்துள்ளன.
தென்கிழக்காசிய  நாடுகள்  எல்லாம்  பௌத்தம் முதலான  பிறசமயக்
கோட்பாடுகளைத்    தம்    சமய    வாழ்க்கைக்கு   உரியனவாய்ப்
பின்பற்றினாலும்   தம்   கலை,   இலக்கியப்   பண்பாட்டு  நெறிக்கு
இராமாயண,   மகாபாரதங்களை   அடிப்படையாகக்  கொண்டுள்ளன
என்னும்  சமுதாய வாழ்வியல் உண்மையை மேற்காட்டிய  இராமாயண
நூல்கள் தெற்றென விளக்குகின்றன.

இராமன் - சீதை திருமணம்

“முனிவரே ஸ்ரீராமர் இந்த வில்லை நாணேற்றிவிட்டால் அயோனிஜ
புதல்வியாகிய    சீதையை   ஸ்ரீராமருக்கு   பாணிக்கிரகணம்  செய்து
தருவேன்”  என்றார்  ஜனகர்  (1.  66 : 27). விசுவாமுத்திரர் ‘வில்லை
ஸ்ரீராமருக்குக்   காட்டும்’   என்றார்.   எட்டுச்   சக்கர   வண்டியில்
ஏற்றப்பட்டு     ஐயாயிரம்      கிங்கரர்களால்      இழுக்கப்பட்டுக்
கொண்டுவரப்பட்ட  ‘வில்லைக்  கண்டதும் விசுவாமித்திரர்,  குழந்தாய்
ஸ்ரீ    ராமா,    வில்லைப்    பார்’    என்றார்.    அவையிலிருந்த
ஆயிரக்கணக்கானவர்   பார்த்துக்   கொண்டிருக்கும்போதே  இராமர்
வில்லைச்  சிரமமின்றி  விளையாட்டாகத் தூக்கி நாணேற்றி  வளைத்து
முறித்து   விட்டார்.   உடனே,   ஜனகர்  சீதை  இராமனுக்கு  வீர்ய
சுல்கமாகத்  தரப்படுவாள்  என்று  அறிவித்தார்.  (1 67: 1,4,12,15,16,22)
இவ்வாறு  இருவகை  வான்மீகங்களும்  கூறுகின்றன. திருமணத்திற்கு
முன்   இராமர்   -   சீதை  சந்திப்பு  நிகழ்வதாகக்  காட்டவில்லை.
கன்னிகாதானமாய்    வீர்ய    சுல்கமாக   (வீரத்துக்குரிய   பரிசாக)
இராமனுக்குச் சீதை மனைவியாகிறாள்.

பௌத்த,     ஜைன ராமாயணங்கள் இராமன் - சீதை திருமணம்
குறித்துச் சிறப்பாக எதுவும் கூறவில்லை. நரசிம்ம புராணமும், பாகவத
புராணமும்  சீதையின்  சுயம்வரம்  பற்றிப்  பொதுவாகக் கூறுகின்றன.
வாசுதேவ  ஹிண்டி சுயம்வரத்தில் சீதையே  இராமனைக் கணவனாகத்
தேர்ந்தெடுத்தாள்  என்று  கூறுகிறது.40  நீரில்  இருந்து கண்டெடுத்த
பெண்ணாகிய  சீதையை இந்தியக் குடியானவர்கள் வளர்த்துப் பருவம்
அடைந்ததும்  தங்கள்  நாட்டு  இளவரசனாகிய இராமனுக்கு அளிக்க,
ராமன் அவளைச் சீதா என்று பெயரிட்டு அவளைத் தன் மனைவியாக
ஏற்றுக் கொண்டான் என்று திபேத்திய ராமாயணம் கூறுகிறது.41

மிதிலையில்  ஜனகனின்  அரண்மையை  நோக்கி   விசுவாமித்திர
முனிவருடன் இலக்குவன் பின்தொடரச் சென்று கொண்


40.  U.P. Shah, 64

41.  J.W. Jong, 164-165