104

சீதையும்    ஒருவரையொருவர்   கண்டு   காதல்   கொள்கின்றனர்.
அவர்கள் இருவரும் பழைய காதலர்கள் என்பதை யாரும் அறியார் (1.
228/1-4) கௌரி (பவானி) சீதையின் வழிபாட்டில் மகிழ்ந்து,  ‘சீதையே,
நீ விரும்பியவாறே, கரிய செம்மலானவன் நின் கணவனாவான்’ என்று
வாழ்த்தியது.  (1.  235 Cahndam). பூங்காவிலிருந்து திரும்பிய இராம
லக்குவர்  தாம் சீதையைக் கண்டது பற்றி விசுவாமித்திரரிடம் கூறினர்.
அவரும்  ‘நீங்கள்  விரும்பியவாறே நடக்கும்’ என்று வாழ்த்தினர். (1.
236/2)

சுயம்வரத்தின்போது,    சனகன் வில்லைக் கொண்டுவந்து வைத்து,
‘இதை  வளைத்து நாணேற்றுபவர்க்குச் சீதை மனைவியாவாள்’ என்று
அறிவிக்கிறான்.   இராவணன்,   வாணசூரன்போன்ற  பெரு  வீரர்கள்
பலரும்  பலமுறை முயன்றும் அந்த வில்லை அசைக்கவும் முடியாமல்
அவமானப்பட்டு     வெளியேறுகின்றனர்.    சனகனால்    சுயம்வர
மண்டபத்திற்கு  வரவழைக்கப்பட்ட  சீதை  இந்நிகழ்ச்சிகளில்  மனம்
செலுத்தாமல்  இராமனையே  நினைந்த வண்ணம் தன் தோழியருடன்
அமர்ந்திருந்தாள்.  பலரும்  முயன்று  தோற்றபின்  சனகன்,  “இந்த
வில்லை  வளைக்கும்  ஆற்றலுடைய  அரச குமாரர்கள் நம் நாட்டில்
எவருமே     இல்லையா?     சீதை     கன்னியாகவே     இருக்க
வேண்டியவள்தானா”  என  மனமுடைந்து  பேசுகிறான்.  (1.  251/1-4)
இதைக்    கேட்டு   வெகுண்ட   இலக்குவன்   மிகவும்   சினமுற்று
விசுவாமித்திரரையும்   இராமனையும்   வணங்கி,   “இந்த   வில்லை
இப்போதே  ஒரு  கணத்தில்  தூக்கி  மண்சாடியை உடைப்பது போல்
சிதறடிக்கிறேன்.   மேரு  மலையையே  நான்  ஒரு  முள்ளங்கிபோல்
நசுக்கிவிடுவேன்.   இந்தப்   பழைய   வில்  எம்மாத்திரம்?  நீங்கள்
அனுமதியளித்தால்,    ஒரு    காளானை   நசுக்குவதுபோல்   இதை
ஒடித்துவிடுகிறேன்”  என்று  கூறுகிறான். இதைக் கேட்டு உள்ளுக்குள்
மகிழ்ந்த  இராமன்  இலக்குவனை  அழைத்து உட்காரச் செய்துவிட்டு
விசுவாமித்திரரை  நோக்க,  அவரும் நல்ல முகூர்த்த நேரம் வந்ததை
உணர்ந்து  “இராமா,  எழு,  சிவதனுசை  உடைத்துச் சனகனின் மனக்
குறையைத்  தீர்”  என்றார்.  (1.253/1-4)  இராமன்  வில்லை நோக்கிச்
செல்வதைக்  கண்ட  சீதை,  சிவனையும்,  பார்வதியையும்  மனத்துள்
துதித்து   “நான்  இதுவரை  செய்த  வழிபாடுகளின்  பலனாக  இந்த
வில்லின்   கனத்தைக்   குறைத்து   இராமன்   எடுப்பதற்கேற்றவாறு
அருளுக”  என்று  வேண்டுகிறாள்.  (1.  256,  257/1-4) தன் குருவை
மனத்துள்  வணங்கி  இராமன்  அந்த  வில்லை எளிதாக எடுத்தான்.
வில்லுடன் நின்ற இராமனை எல்லோரும் ஒரு கணம் பார்த்து