105

முடிப்பதற்குள்  இராமன்  அதை  வளைத்து  நாணேற்றி  இரண்டாக
முறித்து  விட்டான்.  வில்லொடிந்த  ஒலி உலகங்கள் எல்லாவற்றையும்
அதிரச்  செய்தது.  (1.  260/1-4)  சீதை  தோழிகள் புடை  சூழ வந்து
இராமனுக்கு வெற்றிமாலை சூடினாள். (1. 263/1-4)

கி.பி. 1772-73-ஆம்   ஆண்டில்  பிரதி   செய்யப்பெற்ற   துளசி
ராமாயணம்     பல    விளக்கப்    படங்களுடன்   காணப்படுகிறது.
இங்கிலாந்திலிருந்து     பெறப்பட்ட    நல்ல    தாளில்   பல்வேறு
வண்ணங்களில்  இப்  படங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் ஒரு படம்
(9.6) காட்சியை விளக்குகிறது.42

தன்மகள்    பருவமடைந்ததும் வில்வளைப்பு சுயம்வர நிகழ்ச்சிக்கு
ஜனகன்  எல்லா  அரசர்கட்கும்  - இராவணன், பரசுராமன் உட்பட -
அழைப்பு  அனுப்புகிறான்.  அவர்களுள் இராவணன்  மட்டுமே அந்த
வில்லைத் தூக்குகிறான்; ஆனால், வளைத்து  நாணேற்ற முடியவில்லை;
இருப்பினும்   சீதையை   மணம்    முடித்துத்   தருமாறு  ஜனகனை
வற்புறுத்துகிறான்.  இந்த  நிலையில்  இராமலக்குவர்கள்  முனிவருடன்
அங்கு   வருகின்றனர்.   இராமன்  வில்லை  வளைத்து  நாணேற்றிச்
சீதையை  மணக்கிறான்  என்று  கி. பி. 17ஆம் நூற்றாண்டில் எழுத்து
வடிவம்  பெற்ற  இராம  வத்து  (Rama  Vatthu)  என்னும்  பர்மிய
ராமாயணம் கூறுகிறது.43 

தாய்லாந்து    ராமாயணமாகிய  ராம்கியேன் (18ஆம் நூற்றாண்டு),
மிதிலை    நகருள்    முனிவருடனும்    இலக்குவனுடனும்   சென்று
கொண்டிருந்த இராமன் அரண்மனை ஜன்னல்களின்  அலங்காரத்தைக்
கண்டு  வியந்தவனாய்  நடந்தான்.  அப்போது  சாளரத்தின்  வழியே
பார்த்துக்   கொண்டிருந்த   சீதையைக்   கண்டு   இருவரும்  காதல்
கொண்டனர்  என்று  கூறுகிறது. இதுவரை கட்டுக்குள்  அடங்கியிருந்த
சீதையாகிய இலக்குமியின் காதல் இராமனாகிய திருமாலைக்  கண்டதும்
வெளிப்படையாகப்  பொங்கி  வழிந்தது  என்கிறார்  இதன் ஆசிரியர்.
சுயம்வரத்திற்கு    முன்னர்    நடந்ததாக    இதனை    ராம்கியேன்
குறிப்பிடுகிறது.44

கி.பி. 18 அல்லது  19ஆம்  நூற்றாண்டில்  தோன்றிய   லாவோசிய
ராமாயணங்களில்   பிரா   லக்   பிரா   லாம்   (Phra  Lak  Phra
Lam)  என்னும்  இராமாயணம்  சீதை - இராமன்  களவுமணம் பற்றிப்
பேசவில்லை.    ஆனால்,    லாவோசின்    இரண்டாவது    சிறந்த
இராமாயணமாகிய  கவாய்  துவாரபி   (The  Khvay  Thuaraphi of
Gvay Dvorahbi) திரு


42. Niranjan goswami, “A folk painted manuscript  of  the
Ramacaritramanasa” Asian Variations in Ramayana, 120-121.

43. U  Thein Han and U khin zaw, “Ramayana in Burmese
Literature and arts”, Ramayana Traditions in Asia 312.

44. S. Singaravelu,  “Tulasidos....  Valmiki.....  Kamban.....and
Thai version..... The Ramayana Tradion in Asia, 469-70