தடைப்படாமல் இருக்கத் தசரதனே அனுப்பினான் எனவும், கைகேயியே தன் விருப்பத்தால் அனுப்பிவைத்தாள்எனவும், கோசலையின் தூண்டுதலால் தசரதன் அனுப்பிவைத்தான் எனவும் பரதன் கேகயம் சென்றமைக்கான நான்கு வகைக் காரணங்களை இராமாயண நூல்கள் தந்துள்ளன என அறிகிறோம். தெலுகு மொல்ல ராமாயணம் மந்தரை வரலாற்றையோ, அவளது சூழ்ச்சியையோ, குறிப்பிடவே இல்லை.இந்தக் காப்பியத்தில் தசரதனே, தான் எடுத்த முடிவைக் கைகேயிக்கு அறிவிக்கிறான். இதேபோன்று துளசி ராமாயணத்தின் உடன்கால இந்திக் காப்பியமாகிய இராமச்சந்திரிகாவும் மந்தரை சூழ்ச்சியைப் பாடாமல் விட்டுள்ளது என்பதும் இவ்விரு ராமாயணங்களும் வான்மீகத்தையேமுதனூலாகக் கொண்டவை என்பதும் சிந்திக்கத் தக்கன. 1.3.4. இளையவளா இடையவளா? வான்மீகத்தில் கோசலை மூத்த அரசி என்பது தெளிவாகத் தசரதன் வாயிலாகவே கூறப்படுகிறது.ஆனால், கைகேயி இரண்டாமவளா, மூன்றாவது அரசியா என்னும் செய்தி வெளிப்படையாகக் குறிக்கப்படவில்லை. எனினும், கோசலை சுமித்திரை ஆகிய இருவரின் நெருக்கமான உறவைக் கோசலையே குறிப்பிடுவதாலும், பாலகாண்ட முன்னுரையில் இடம் பெற்றுள்ள ஒப்பியலாய்வில் காட்டப்பெற்ற காரணங்களாலும்,17 கைகேயி மூன்றாவது மனைவியாக இருக்கலாம் என்னும் கருத்து வலுப்பெறுகிறது. வான்மீகிக்கு அடுத்தமுழு இராமாயண நூலாகிய கம்ப ராமாயணம் சுமித்திரையை இளையவள் என்று குறிப்பிடுகிறது. (I.5.105) வான்மீகத்தை ஒட்டியே செல்லும் கம்பன், கோசலை-சுமித்திரை இருவரின் உறவு நெருக்கத்தைக் குறிப்பாகக் காட்டுகிறான். (II. 2.2 - 7). இராமனுக்கு நேர் இளையவன் பரதனாகையாலும் இலக்குவனும், சத்துருக்கனனும் இவர்கள்இருவர்க்கும் இளையவர்களாதலாலும் இவர்தம் தாயரையும் இதற்கேற்பக் கோசலை - கைகேயி - சுமித்திரைஎன்னும் வரிசையில் வைத்துப் பார்க்கும் பொது நோக்கம் வாசகர்களிடையே பரவியருக்கக் காண்கிறோம். சில பிற்கால நூல்களும் இக்கருத்துடையனவாய்க் காணப்படுகின்றன. காட்டாகச் சங்கதாசரின் வாசுதேவஹிண்டி (கி.பி. 5ஆம் நூற்றாண்டு) போன்ற ஜைன ராமாயணங்களும் கி.பி.16ஆம் நூற்
17. கோவைகம்பன் அறநிலை பதிப்பு: கம்ப ராமாயணம் - பாலகாண்டம் முன்னுரை பக்கம் 75-76. |