751

றாண்டில் தோன்றிய சந்திராவதிஎன்னும் வங்காளக் காப்பியமும்
கைகேயியை இரண்டாம்மனைவி என்று காட்டுவதைச் சுட்டலாம்.18

     வியாசரின் மகாபாரதம் கைகேயி தசரதனின் மூன்றாம் மனைவி என்றும், 
பரதனின் தாய் என்றும்முதன் முதலாகத் தெளிவாகக் கைகேயி இளையவள்
என்று கூறுகிறது.  (வனபர்வம் 274 - 75). மேலும் இந்தி ராமாயணங்களிலும், 
காஷ்மீரி  ராமாயணங்களிலும்  கைகேயி மூன்றாமவளாகவும்,  சிறிய
ராணியாகவும்குறிக்கப்படுகிறாள்.19 தக்க சான்றுகள் காட்டவில்லையேனும்
இக்கருத்தை ஜெகவீர பாண்டியனார் ஐம்பதாண்டுகட்கு முன்னரே
வெளிப்படுத்தியிருப்பதும் இங்கே நினைவு கூர்தற்குரியது.20

     சில இராமாயண நூல்கள் தசரதன்  - கைகேயி உறவினை மாற்றியும்
கூறுகின்றன. காட்டா
ஹிகாயத் செரீராம (Hikayat seri Rama) என்னும்
மலேசிய ராமாயணம் தசரதனுக்குப் பால்யாதரிஎன்னும் ஆசை
நாயகியினிடத்துப் பிறந்தவள் கைகேயி என்று கைகேயியைத் தசரதனின்
மகளாகக் காட்டுகிறது.21இத்தகைய உறவு வேறுபாட்டை இந்திய
ராமாயணங்கள் எவையும் காட்டவில்லை.

1.3.5. கைகேயியின் பண்புகள்

     மந்தரையின் தீயுரைகளால் தூண்டப்படுவதற்கு முன்னும் பின்னும்
கைகேயி எத்தகைய பண்புடையவளாகஇருந்தாள் என்பதை இராமாயண
நூல்கள் நன்கு படைத்துக் காட்டியுள்ளன.  குறிப்பாக வான்மீகமும், கம்ப
ராமாயணமும்,  இராமசரித மானசமும் இப்பாத்திர விசேடத்தை மிகச்
சிறப்பாகப் படைத்துள்ளனஎனலாம்.

வான்மீகம்

     அரசர் குலத்தில் தோன்றி அரசருக்கு மனைவியாக வாழ்பவள்
கைகேயி, மகளாகவும், மனைவியாகவும்அரச குடும்பத்தோடு
தொடர்புடையவள் அரசனுக்குத் தாயாகவும் ஆகவேண்டும்


18.   D. sen The Bengali Ramayanas (Calcutta, 1920) pp. 196-197),
     quotedby S.Singaravelu, "The Literary version of the Rama
     story in Malay",
Asisanvariations in Ramayana, 
     p. 293, n. 38.
19.   ஓங்கார கைலை
20.   புலவர் உலகம்: (கம்பன் கலை நிலை) தொகுதி நான்கு (மதுரை: 
     வரதராஜுலு  நாயுடு பிரஸ், 1945) ப. 1349.
21.   S. Singaravelu,  p . 284.