752அயோத்தியா காண்டம்

என்னும் குறிப்புத் தோன்ற மந்தரை இச்செய்தியைக்கூறுகிறாள். (II. 7.2, 3)
மந்தரையின் மூலம் இராமபட்டாபிஷேகம் பற்றிக் கேள்விப்பட்ட  கைகேயி,
இராமன் -  பரதன் இருவரிடையே தனக்கு வேறுபாடு இல்லை என்றும்,
இராம பட்டாபிஷேகத்தை விட மகிழ்ச்சியானவேறொரு செய்தியைத் தனக்கு
அவள் சொல்ல முடியாது என்றும் கூறி மகிழ்கிறாள்.   (7.35, 36)மேலும்
அவள்,

இராமன் தர்மநெறி தவறாதவன்; பெரியோரால் பண்படுத்தப்
பெற்றவன்; செய்ந்நன்றி அறிபவன்;பிறர்க்குரியதை விரும்பாத
உள்ளத்தன்; சத்திய சந்தன்; நால்வருள் மூத்தவன்; எனவே
அரசநீதியின்படிபட்டத்திற்குரியவன்; உடன் பிரிந்தவர்களைத்
தந்தையைப் போல் பாதுகாப்பவன்; கோசலையை விடஎன்னிடம்
மிக அதிகமான தாயன்புடையவன்; பரதன் எனக்குப் பிரிய
மானவன்; எனினும் இராமன் அவனிலும்மேம்பட்டவன்;
தம்பியரைத் தன்னுயிராகக் கருதுபவன். எனவே பட்டாபிஷேகம்
ராமனுக்குரியதாயினும்அரசு பரதனுடையதாகவே இருக்கும்.

என்று இராமனின் புகழைப் பலபட விரித்துரைக்கிறாள்.   (II. 8.14, 18, 19)

     நற்குண நற்செய்கைகளால் பெரும்புகழ் பெற்றவளான கைகேயி
கூனியின் தீயுரையால் நன்மையிதுதீமையிது என்று விதந்து அறியும்
ஆற்றலற்ற ஒரு சிறுமி போலாகிவிட்டாள்.   துர்ப்போதனையால் கர்வம்
தலைக்கேறிய கைகேயி மந்தரையின் அறிவுக் கூர்மையினையும் கேசாதிபாத
அழகினையும்பலபடப் புகழ்ந்து கூறுகிறாள் (II. 9.36, 37). கூனியின்
தூண்டலால் இராம பட்டாபிஷேகத்தைத்தடுக்க முடிவு செய்து
விட்டாளாயினும் தன் மனச்சாட்சிக்கு ஒவ்வாத எண்ணமாதலின் உள்ளம்
தடுமாறப்பெற்றவளாய்ப் பெருமூச்செறிந்து தான் செய்யவிருக்கும்
காரியத்திற்கேற்ற உபாயம் குறித்து ஆலோசனைசெய்யலாளாள்  (II. 10.3).

     கம்பன், துளசிதாஸ் ஆகிய இருவர்தம் காப்பியங்களும் ஏறக்குறைய
இதே கருத்தோட்டத்துடன்கைகேயின் மனமாற்றத்தைப் படிப்படியாக
விவரிக்கின்றன.

     ஜைனராமாயணங்கள் பெரும்பாலும் கைகேயியை நற்குண
நற்செய்கைகள்  உடையவளாகப் படைத்துக்காட்டியுள்ளன.  தசரதனைப்
பின்பற்றித் துறவு மேற்கொள்ள முனைந்த பரதனைத் தடுத்து  நிறுத்துவதன்
பொருட்டு அவனை அரச பதவியில் அமர்த்த விரும்பினாள் என்றும்,  
பரதன் மீதுள்ள அன்பின் காரணமாகஇராமன் தானே காடேக
முடிவெடுத்துச் சென்றான் என்றும்