753

ஜைனராமாயணம் கூறுகிறது.22  காட்டாக விமலசூரியின் பௌம சரிதம்
என்னும் இராமாயண நூல் கைகேயி தன் மகன் மீது அளவு கடந்த
பற்றுடையவள் என்றும், தன் கணவன் துறவு மேற்கொள்வதைஏற்றுக்
கொள்பவள் என்றும், கணவனொடும், மகனோடும் நல்லிணக்கம்
உடையவளாகப் படைத்துக் காட்டுகிறது.  மேலும் இந்த இராமாயணத்தில்
வரும் கைகேயி இராமன் காடேக வேண்டுமென்று வேண்டவில்லை.23

1.3.6. கைகேயி வரங்கள் பெற்ற சூழல்

வான்மீகம்

     தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில்
எதிரியின் அம்புகளால் மூர்ச்சையடைந்துவீழ்ந்த தசரதனைக் கைகேயி
விழிப்பாக இருந்து காப்பாற்றினாள்.  அந்த உதவியால் மனமுவந்ததரசதன்
அவளுக்கு இரண்டு வரங்களைத் தந்திருந்தான்.  வேண்டும்போது  கேட்டுப்
பெற்றுக் கொள்வதாகக்கைகேயி கூறினாள்.  (II. 11.18, 25; II. 18.32)

வாசுதேவஹிண்டி

     முன்பொரு காலத்தில் தன் உறவினர்களை உபசரிப்பதில் கைகேயி
காட்டிய ஆர்வத்தையும் திறமையையும்பார்த்து மகிழ்ந்த தசரதன் அவளுக்கு
ஒரு வரம் கொடுத்தான். பிறகு பெற்றுக் கொள்வதாகக் கைகேயி 
கூறியிருந்தாள். பின்பொருகால், எல்லைப் புற அரசன் ஒருவனுடன் நடந்த
போரில்தசரதன் கைது  செய்யப்பட்டான்.  அப்போது கைகேயி துணிந்து 
படைகளுக்குத் தானே தலைமை தாங்கிஎதிரியுடன் போரிட்டு வென்று
தசரதனை விடுதலை செய்து கொண்டு வந்தாள்.   அவளுடைய வீரச்
செய்கையால்மகிழ்ந்த தசரதன் மற்றொரு வரத்தை அவளுக்குக்
கொடுத்தான்.  அதனையும் வேண்டும்போது பெற்றுக்கொள்வதாகக்கைகேயி
கூறியிருந்தாள்.24

வடஇந்திய நாட்டுப்புறப் பாடல்

     சீதை வீடு பெருக்கிய குப்பையை ஓரிடத்தில் கொட்டிவந்தாள். அந்தக்
குப்பை மேட்டில்மூங்கில் புதர் ஒன்று செழித்து


22.   H.C. Bhayani  "The Prakrit and Apabhramsa Ramayana's"    
    
AsianVariations in RamayanaP.81.
23.   U.P. SHAH. "Ramayana in Jaina Tradition",
Asian Variations
     inRamayana,  P. 68
24.   U.P.  Shah,  P.  64.