வளர்ந்தது. அதிலிருந்த மூங்கில் கழியை வெட்டச் சென்ற தசரதன், விரலில் முள் குத்தி வலியால் துடிதுடித்தான். அப்போது உடன் சென்றிருந்த கைகேயி அந்த முள்ளை எடுத்து அவன் வலியைப்போக்கினாள். அதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்த தசரதன் அவளுக்கு ஒரு வரம் தந்தான். அதன்படி "பரதனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி இராமனைக் காட்டிற்கு அனுப்புங்கள்" என்று கைகேயி வேண்டினாள். அதைக் கேட்டுத் துணுக்குற்ற தசரதன், "என்ன வரம் கேட்டாய் நீ, ஒரு சிறு முள்ளை என் விரலில் இருந்து பிடுங்கிவிட்டுக் கூர்மையான அம்பொன்றை என் நெஞ்சில் பாய்ச்சி விட்டாயே" என்றுகதறி அழுதான்.25 சம்பரா சூரனுடன் பொருது வென்றபோது தசரதன் உனக்கு அருளிய இரண்டு வரங்களை இப்போது கேள்என்று கூனி உபாயம் செப்பியதாகக் கம்பராமாயணம் கூறுகிறது. (II. 2.89) உந்தன் மணவாளரும் கோசலையும் உகந்து ரதம் ஏறி வரும்போது தேர்வண்டி அச்சுதான் முறிய சிறப்பாய் உன் கரத்தினால் ஏந்திக்கொண்டாய் அப்போது உன் கணவன் தான் பார்த்து ஆயிழையே உனக்கென்ன வரம் கேளும் என்றார். கேளுமென்று ராசன் உரைத்த போது கெம்பீரமா யுன் மகன் பரதாள் வார்க்கு எந்தன் மகன் பரதாள் வானுக்கு யேத்த முதப்பட்டங் கட்டவேணும் யென்று நீவரங் கேட்டபடி யிசைந்து வரமது தந்து விட்டார் அந்த வரம் சற்றும் நினையாமல் ஆயிழை கைகேசி மறந்து விட்டாய்.26 அத்யாத்ம ராமாயணம் தசரதன், தேவர்களுக்குத் துணையாக அரக்கர்களுடன் போர் புரியும் போது, பகைவர்கள் தன் தேரின் கடையாணி இற்று விழும்படி செய்ததை அறியவில்லை. கூர்மையான புத்தியுடைய நீ மிக்கதைரியத்துடன் ஆணிக்குப் பதிலாக உன்னுடைய இடக்கையை
25. Vidya Nivas Misra "The Rama story in Indian Folklore" Asisanvariations in Ramayana. P. 104. 26. அயோத்தி கதை (நாட்டுப்புறக் கதைக்காவியம்), (ப.ஆ) வை.தி. நடராசன், நாகர்கோவில்: இராஜேஸ்வரி வெளியீடு, 1987, ப. 152. |