755

மாட்டி வலக் கையால் தேரையும் செலுத்தினாய்.   போரில் வெற்றி பெற்ற
தசரதன் உன்னுடையதைரியத்தையும்,  புத்திக் கூர்மையையும் கண்டு
மகிழ்ந்து  இரண்டு வரங்கள் அளித்தார்;  நீயும்காலம்  வரும்போது 
அதனைப் பெற்றுக் கொள்கிறேன் என்றாய் என்று கைகேயியிடம் மந்தரை 
கூறுவதாக  அத்யாத்ம  ராமாயணம்  கூறுகிறது.27

     சம்பரா சூரனுடன் செய்த போரில் உதவியமைக்காகத்  தசரதன் 
மகிழ்ந்து கைகேயிக்கு இரண்டு வரங்களைத் தந்திருந்தான் என்று
ரங்கநாத
ராமாயணமும்
பாஸ்கரராமாயணமும்கூறுகின்றன இவ்வரங்களைக் கூனி
கைகேயிக்கு நினைவுபடுத்தியதாக இவ்விரு இராமாயணங்களும்
குறிப்பிடுகின்றன.  
மொல்லராமாயணம் மந்தரை என்ற பாத்திரத்தைப்
படைத்துக் காட்டவில்லை. எனவே,  கைகேயியே  இரண்டு வரங்களைத் 
தசரதனிடம் கேட்பதாக இந்த இராமாயணம் கூறுகிறது.  கன்னட
தொரவெராமாயண மந்தரை தசரதன்  கொடுத்திருந்த இரண்டு வரங்களைக்
கைகேயிக்கு நினைவுபடுத்துகிறாள். சம்பராசூரனுடன் நிகழ்த்திய போரில் 
உதவியமைக்காகத் தசரதன் கைகேயிக்கு இருவரங்களைக்கொடுத்திருந்த
செய்தியைக் கூனி கைகேயிக்கு நினைவுபடுத்தினாள் என்று
கன்னச
ராமாயணமும்
எழுத்தச்சன்ராமாயணமும் காட்டுகின்றன.

     துளசி ராமாயணக் கூனி,  ‘தசரதன் உனக்களித்த இரண்டு வரங்களை
மறந்துவிட்டாயா? அவற்றைஇப்போது பெற்று உன் புண்பட்ட உள்ளத்தை
ஆற்றிக் கொள்’  என்று  கைகேயியிடம் கூறுகிறாள். வரங்கள் பெ்றப்பட்ட
சூழலைத் துளசிதாசர் இங்கு விவரிக்கவில்லை. (II. 22.3)28


27.   நடேச சாஸ்திரி ப. 62.
28.   கைகேயி பெற்ற வரங்களின் எண்ணிக்கை
தசரதன் கைகேயிக்கு
     இரண்டு வரங்கள் கொடுத்தான் என்று வான்மீகம்கூறுகிறது.
     (II. 9.17, 18)
    
அத்யாத்ம ராமாயணம்,  கம்ப ராமாயணம்,  தெலுகு,  கன்னட, 
     மலையாள ராமாயணங்கள்,  துளசிராமாயணம் என்பனவெல்லாம்
     கைகேயி இரண்டு வரங்கள் பெற்றாள் என்று வான்மீகத்துடன் ஒத்துச்
     செல்லுகின்றன.
     தசரதன் கைகேயிக்கு ஒரு வரம் கொடுத்ததாகத் தசரதஜாதகமும், மகா
     பாரதமும்  திபேத்திய ராமாயணமும்கூறுகின்றன.  மூன்று வரங்கள்
     தந்ததாகப் பிரம்மபுராணம் கூறுகின்றது. (A.N.Jani, PP.30, 33)