756அயோத்தியா காண்டம்

     தேவாசுர யுத்தத்தில் கலந்து கொண்ட தசரதனின் தேர் அச்சு 
முறிந்துவிட அவனுடைய இளையமனைவி தன்கையால் அச்சு கழன்று
விழாதவாறு கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். போரில் வெற்றி பெற்றுத்
திரும்பிய தசரதன் தன் மனைவியின் கைகள் இரத்தக் காயமுற்றிருப்பது
கண்டு காரணம் கேட்கஅவள் நடந்ததை விவரிக்கிறாள். அவள் உதவிக்கு
மகிழ்ந்த அரசன் அவளுக்கு ஒரு வரம்தருகிறான்.  வேண்டும்  போது 
வாங்கிக் கொள்வதாக அவள் கூறுகிறாள் என்று கி.பி. 1429 இல்
எழுதப்பட்ட ஒரு திபேத்திய ராமாயணம் கூறுகிறது.29

     தேவாசுரப் போரில் ஈடுபட்ட  தசரதன் அசுரர்களின் ஆயுதங்களால்
புண்படுத்தப் பெற்றான். அயோத்தி திரும்பியதும் அவனுடைய இளைய
மனைவி கேகேயா என்பவள் அப்புண்களைக் குணப்படுத்தினாள்.அந்த
உதவியால் பெரிதும் மகிழ்ந்த தசரதன் அவளுக்கு ஒரு வரம் தந்தான்
என்று  கி.பி. 1586இல் இயற்றப்பெற்ற மற்றொரு திபேத்திய இராமாயணக்
கதை கூறுகிறது.30

1.4. தசரதன் சாபம் பெற்ற வரலாறு

     தசரதன் தான் இறப்பதற்கு முன்னர்க் கோசலையிடம் தான் பெற்றிருந்த
சாபமொன்றை  விவரித்துக்கூறுகிறான்:  கோசலையை மணப்பதற்குமுன்
இளவரசனாக இருந்தபோது  ஒருநாள் வேட்டைக்குச்  சென்றிருந்ததசரதன்
யானை நீர் அருந்துவதாகக் கேட்ட ஒலியைக் குறியாகக் கொண்டு
அம்பெய்தான்.  அம்புபட்டு அலமறும்  யானைக் குரலுக்கு மாறாக ஒரு மனிதக்குரல் அலறுவதைக் கேட்டு மனம் நடுங்கி அருகில் சென்றுபார்க்க
ஒரு முனிபுத்திரன் அம்பு துளைத்துத் துடித்துக்கொண்டிருக்கக் கண்டான். 
கண்டதும்  யாரென்றுவினவப் பார்வையற்ற  பெற்றோர்க்கு  நீர் வேண்டி
வந்ததாகவும்,  அம்பெய்யப்பெற்ற  நிலையில்தான் பிழைக்க இயலாமையின்
தன் பெற்றோர்க்குத்  தன்னிலை கூறி நீர் கொடுத்து உதவுமாறும்
வேண்டியவாறே இறந்தான்.  கொலைப் பழிக்கு அஞ்சிய தயரதன் 
நீர்க்குடத்துடன் முனிதம்பதியரை அடைந்து தான்யாரென்பதையும், நடந்த
விவரத்தையும்  கூறித் தன்னை  மன்னிக்குமாறு வேண்டி நிற்க,  மீளாத்
துயரத்தாழ்ந்த அவ்விருவரும் இறந்த தம் மகனைத் தசரதன் உதவியால் 
கண்டு பலவாறு புலம்பி, ‘எம்மைப்போன்றே  நீயும் புத்திரசோகத்தால்
இறந்து  படுவாயாக’  எனச்


29.   J.W.  De. Jong,  "The Story of Rama in Tibet" Asian
    Variations inRamayana
PP. 173-174.
30.   J.W. De. Jong,  P. 178.