சாபம் இட்டவாறே உயிர் நீத்தனர். இவ்வாறு தான் பெற்ற முனிவரின் சாபத்தை விவரித்த தசரதன் தனக்கு இறுதி நேர்வது உறுதி என்று கூறி இராமனை நினைந்தவாறே உயிர்நீத்தான் என்பது இராமகாதையால் பெறப்படும் செய்தி. இந்த நிகழ்ச்சியை எல்லா இராமாயண நூல்களும் கூறுகின்றன வெனினும் இந்நிகழ்ச்சி காப்பியத்தில் குறிக்கப்பெறும் சூழல், முனிகுமாரனின் பெயர், குலம், நிகழ்ச்சியின்முடிவு என்னும் விவரங்களில் பின்வருமாறு வேறுபடக் காண்கிறோம். 1.4.1. வரலாறு இடம்பெறும் சூழல் இராமன், சீதை, இலக்குவன் ஆகியோரைக் காட்டில் விட்டுத் திரும்பிய சுமந்திரன் தசரதனைக் கண்டு இராமன் முதலானோர் திரும்பி வரவில்லை என்று கூறியதும் சோர்ந்து விழுந்ததசரதன் கோசலையிடம் இவ்வரலாற்றைக் கூறுவதாக வான்மீகம் கூறுகிறது. (II. 63-64). இதனைப் பின்பற்றி அத்யாத்ம ராமாயணம் (II. 7), ரங்கநாதம், பாஸ்கரம், கன்னசம், எழுத்தச்சன் ராமாயணம், துளசியின் இராமசரித மானசம் (II. 155.2) ஆகிய இராமாயண நூல்களும் இராமன்காடு சென்ற ஆறாம் நாளிரவு சுமந்திரன் அயோத்தி மீண்ட பின்னர்த் தசரதன் இவ்வாறு உரைப்பதாகக் காட்டுகின்றன. பஞ்சாபியில் எழுந்த கோவிந்த ராமாயணம் மட்டும் காப்பியத் தொடக்கத்தில்தசரதனின் ஆட்சிச் சிறப்பை விவரிக்குமிடத்திலேயே இவ்வரலாற்றைக் கூறுகிறது. தெலுகுமொல்ல ராமாயணம் இவ்வரலாற்றைக் குறிப்பிடவே இல்லை. கைகேயின் மூலம் தசரதன் ஆணையைக்கேள்வியுற்ற இராமன், இலக்குவனுடனும் சீதையுடனும் வனஞ்செல்லத் தயாராகும் நிலையில் அயோத்தியில்இருக்கும் போதே தசரதன் இந்த வரலாற்றைக் கோசலைக்கு கூறுவதாகக் கம்பராமாயணம் கூறுகிறது.(II. 4.72 - 87) தன் கண்ணெதிரிலேயே இராமன், சீதையும் இலக்குவனும் உடன்வரத் தேரேறிச் செல்லுவதைத்தசரதன் கண்டு சுமந்திரனை நோக்கி ‘நிறுத்து’ என்கிறான். இராமன் ‘செலுத்து’ என்று கூறத்தேர் விரைந்து மறைவதைக் கலங்கிய கண்களுடன் கண்ட தசரதன் மயங்கி வீழ்ந்தான். எனினும், வசிட்டன், சுமந்திரன், நகர மக்கள் என்னும் பல திறத்தாரின் அறிவுரைகட்கும் வேண்டுதலுக்கும்இணங்கி இராமன் காட்டிற்குச் செல்லாமல் மீண்டு வருவான் என்று ஓர் அவல எதிர்பார்ப்பு வான்மீகத்தசரதனிடம் இருந்தது. எனவே, தனக்கு இறுதி நேரும் என்பதை உறுதியாகக் கருதாத நிலையில்தசரதன் சுமந்திரன் வரவை எதிர் நோக்கியிருந்தான். அவன் வந்து இராமன் திரும்பவில்லைஎனக் கூறியதும் தன் இறுதி |