குறித்து மேலும் உறுதிப்பட்ட நிலையில் முனிவரின் சாபம் நினைவுக்கு வரவே தசரதன் கோசலையிடம் இவ்வரலாற்றைக் கூறுகிறான். மன்னவன் ஆணையெனக் கைகேயி கூறியதைக் கேட்ட கம்பராமன் அப்போதே அவளிடம் விடைபெற்றுக்காடு செல்லப் புறப்பட்ட நிலையில் தசரதனைக் காணவுமில்லை; தசரதன் இதனை அறியவுமில்லை. எனவே, இராமன் காடு சென்றான் என்பதைக் கைகேயி மூலம் அறிந்ததும் தசரதன் அவளைப் பலவாறு இழித்துக் கூறிப் புலம்பிச் சோர்ந்த நிலையில் "ஐயன் வரினும் வருமால், அயரேல் அரசே" என்று ஆறுதல் கூறிய கோசலையிடம் தசரதன் இவ்வரலாறு கூறி, அந்த முனிசொற் றமையின் அண்ணல்வனம் ஏகுதலும் எந்தம் உயிர்வீகுதலும் இறையும் தவறா (87) என்று முனிவரின் சாபம் பழுதுபடாது எனவும் இராமன் வனம் செல்வதும் தான் உயிர்நீப்பதும் ஒருதலையாக நிகழும் எனவும் அவளைத் தெளிவிக்கிறான். சுமந்திரன் மீண்டு வரும் வரை உணர்வு, மயங்கியிருந்த தசரதன் அவன் வந்து இராமன் வரவில்லை என அறிவித்த உடனே உயிர்துறந்தான் என்பதுகம்பன் காட்டும் காட்சி. (II. 5.59) காடேகிய இராமன் மீளவில்லை என்று அறிந்த பின்னர் தன் சாப வரலாற்றை விளங்க உரைக்குமளவுக்குத்தசரதன் உணர்வுடன் இருந்தான் என வான்மீகம் காட்ட, "போயினான் என்ற போழ்தத்தே ஆவிபோனாள்" (II. 5.59) என்று கம்பராமாயணம் காட்டுகிறது. தன் உயிரனையான் எனத் தசரதன் இராமனைக்கருதியமையும் உயிர்நீங்கியவிடத்து உடலும் நீங்கியமையும் உடன் புலப்படுமாறு படைத்துக் காட்டவிரும்பிய கவிச்சக்கரவர்த்தி இம்மாறுதலைச் செய்தான் எனக் கொள்ளலாம். நீண்டு நடக்கும்இக்காப்பிய நிகழ்ச்சியை நாடகப்படுத்தின் கம்பனின் கைவண்ணமும் கலை முதிர்ச்சியும் எளிதில்புலப்படும். 1.4.2. முனிகுமாரனின் பெயரும் குலமும் தசரதனால் மாண்ட முனிகுமாரனின் பெயரையோ, முனிவரின் பெயரையோ வான்மீகம் குறிப்பிடவில்லை. அத்யாத்ம ராமாயணமும், துளசி ராமாயணமும், ரங்கநாதம் முதலான பிற இராமாயணங்களும் இதனைக் குறிப்பிடவில்லை. கம்பன் கழகப் பதிப்பின்படி கம்ப ராமாயணமும் இதனைக் குறிப்பிடவில்லை. எனினும் சில அச்சுப் பிரதிகளிலும், ஓலைச்சுவடிகளிலும் காணப் |