759

படுவதாக இரண்டு பாடல்களை அண்ணாமலை,  உ.வே.சா. பதிப்புகள்காட்டி 
மிகைப்பாடல்களாகஇவற்றைத் தருகின்றன.  கம்பன் கழகமும்  அவ்வாறே 
தருகிறது.  இத்தகைய குறிப்பெதுவுமின்றி  வை.மு.கோ. இவற்றை     
நூலுள்ளேயே பதிப்பித்துள்ளார்.  இந்த இரு பாடல்களுள்  ‘அந்நான்
மறையோன்’  எனத் தொடங்கும் பாடல் காசிய முனியின் வழியில் வந்த
சலபோசனன் என்னும் முனிவரின் மகன்சரோசனன் என்று முனிகுமாரனைச்
சுட்டுகிறது.  கோவிந்த ராமாயணம்  முனிகுமாரனின் பெயர் சரவணகுமரன்
என்று கூறிகிறது.31  டாக்டர் சங்கர ராஜு நாயுடு தமது கம்பன் - துளசி
ஒப்பாய்வில், கம்பராமாயணம்,  அத்யாத்மம்,  துளசி ராமாயணம்  போன்ற
எல்லா நூல்களிலும் முனிகுமாரன் சரவணகுமரன் என்று குறிக்கப்படுவதாகக்
கூறுகிறார்.  ஆனால்,  இவற்றுள் எந்த நூலிலும் இப்பெயர்
காணப்பெறவில்லை. எதன் அடிப்படையில் இவர் இவ்வாறு கூறுகிறார் என
அறிய இயலவில்லை.32

முனிகுமாரனின் குலம்

     தன்னைக் கொன்றமைக்காகப் பிரமகத்திக் குற்றம் உண்டாகுமோ
என்று தசரதன்  ஐயுறுவதாகக்கருதிய முனிகுமாரன், தான் வைசிய முனிக்குச்
சூத்திர ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன்; எனவே, பிரமகத்தி பீடிக்கும் என்று
அஞ்ச வேண்டாம் என்று அவனுக்கு ஆறுதல் கூறுகிறான் என்பது
வான்மீகம். (II.63). அத்யாத்ம ராமாயணமும் முனிகுமாரனை வைசியன் என்று
காட்டுகிறது.  (II.7)  துளசிராமாயணம் இவ்வரலாற்றை ஒரே தோகாவில்
சுருக்கிக் கூறுதலின் இத்தகைய விவரங்கள் இடம் பெறவில்லை. ஏனைய
இராமாயண நூல்கள் இதை மிகுதியும் விதந்து கூறவில்லை.

     கம்பராமாயண மிகைப்பாடல்களாக மேலே குறித்த இரண்டும்
முனிகுமாரனைக் காசிப  முனியின்வழிவந்த நான்மறையோன் எனக்
குறிப்பிட்டு  அந்தணர் குலத்தவனாகக் கூறுகின்றன.  வேறெந்த இராமாயண
நூல்களும் இவ்வாறு குறிப்பிடாமையாலும்,  சுரோசனன் சலபோசன் என்னும்
பெயர்களையும் பிற  இராமாயணநூல்கள் கூறாமையாலும்,  இவை
செருகுகவிகள் என்னும் கருத்து  வலியுறுகிறது.  எனவே,  அண்ணாமலை
முதலான


31.   கோவின்ந்த ராமாயனம்,பிரதி. 5-8,
     ஓங்காரகைலை,பிரதி. 78
32.   Kambaramayana and Tulasi Ramayan, P.143.