760அயோத்தியா காண்டம்

பதிப்புகள் இவற்றை மிகைப்பாடல்களாகக் காட்டியமை பொருத்தமாகவே
தோன்றுகிறது.

1.4.3. ஜப்பானிய ராமாயணமும் சாப வரலாறும்

     வான்மீகி ராமாயணத்தில் வரும் தசரதன் சாப வரலாற்று  நிகழ்ச்சி 
ஜப்பானிய  ராமாயணமொன்றில்பல்வேறு மாற்றங்களுடன்  படைக்கப்
பட்டுள்ளது.  கி.பி.  பத்தாம்  நூற்றாண்டில் தோன்றியசாம்போ -
எகோடோபா (Sambo-ekotoba) என்னும் புகழ்பெற்ற ஜப்பானியக்
கதைக்கொத்தில்இவ்வரலாறு ஒரு தனிக் கதையாகத் தரப்படுகிறது.33 
இக்கதைக்கு வான்மீகி  ராமாயணமே மூலமாகக்கருதப்படினும் 
பௌத்தர்களால் இடம் பெயர்ந்து பரவிய காரணத்தால் புத்தமதக்
கருத்துகளுக்கேற்பஇக்கதை பல மாற்றங்களுடன் ஐப்பானில் வழங்கி
வருகிறது.  அம்மாற்றங்களுள் சில பின்வருமாறு:

1. முனிகுமாரன் இதில் செமு என்றழைக்கப்படுகிறான். சில
ஜப்பானியக் கதைகளில் சாமா, சியாமகா, சென் என்று பல்வேறு
பெயர்கள் இவனுக்கு வழங்கப்பட்டுள்ளன.
 
2. இக்கதையின் முடிவில் முனிகுமாரன் தேவேந்திரனின் அருளால்
உயிர்த்தெழுகிறான்.  அவனுடைய பெற்றோராகியமுனி
தம்பதியரும் கண்பார்வை பெற்றுத் தம் மகனைக் கண்டு
களிக்கின்றனர்.

33. வான்மீகத்தில் வரும் இவ்வரலாறு பாலிமொழியில் அமைந்த சாம
ஜாதகத்திலும்,  மகாவஸ்து அவதானாவில் வரும் சியாமக
ஜாதகத்திலும் காணப்படுகிறது.  இக்கதை பின்னர் சீனதிரிபிடகத்தில்
புத்தமத  அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கி வந்தது. 
பின்னர்ப் பௌத்த மதம் ஜப்பானில்பரவியபோது  இவ்வரலாறும்
ஜப்பானிய மொழியில் மொழியாக்கம் பெற்றது.  இராமகதையைக்
கூறும்ஜப்பானிய நூல்களுள் சாம்போ எகோடோபாதான் முந்தியது.
இதனுள் இராமகாதை முழுவதும் இடம் பெறவில்லை. 
இராமகாதையை முழுவதுமாகக்கூறும்  ஹொபுட் சுஷு (Hobutsushu)
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இந்நூற்
பொருண்மைக்குரிய மூலம் சீனமொழிக்கதைகள் என்று கருதப்படினும்
இந்தியா அல்லது  தென்கிழக்காசிய நாடுகள் வழியாக வான்மீக
மூலமே ஜப்பானுக்குச் சென்றிருக்கக் கூடும் என அறிஞர்கள்
கருதுகின்றனர். மேலும்,  கி.பி. 750இல் ஜப்பானின் தலைநகரமாகிய
ராராவில் (NARA)  நிறுவப்பட்ட மிகப் பெரியபுத்தர் சிலையைத்
திறப்பதற்காகப் பரத்வாஜ போதிசேனர் என்னும் இந்தியப் பிராமண
அறிஞர்தம் குழுவுடன் ஜப்பான் சென்றிருந்தார் என்று ஜப்பானின்
பழம்பெரு இலக்கியமாகிய மன்யோஷு (Manyoushu)குறிப்பிடுகிறது.  எனவே,  எட்டாம் நூற்றாண்டு முதலே இராமகாதை ஜப்பான்
நாட்டில் பரவத் தொடங்கியமைவரலாற்று உண்மையாகிறது. காண்க:

Minoru Hara, "Rama Stories in China and Japan: A
Camparison," Asisanvariations in Ramayana, PP.340-456.