| 3. | பெற்றோர்ப் பேணும் ஒழுக்கத்தை வற்புறுத்தும் நோக்கத்துடனும் கொல்லாமையை வற்புறுத்தும் நோக்கத்துடனும் இக்கதை படைக்கப்பட்டுள்ளது. அதாவது, காப்பியமாகஅமையாமல் நீதிக் கதையாக அமைந்துள்ளது. | | 4. | நிகழ்ச்சி முடிவில் அரசன் சாபத்துக்குள்ளாகவில்லை. தேவேந்திரன் அருளால் முனிகுமாரன்உயிர்த்தெழுந்தமையைக் கண்ட அரசன் தானும் துறவறமேற்று அவனுடன் வாழ விரும்பியபோது, தன்னாடுதிரும்பி அன்பும், கருணையும் கொண்டு அரசாளவும், வேட்டைத் தொழிலை விட்டொழிக்கவும்அறிவுறுத்தப் பெறுகிறான். அரசனும் நாடு மீண்டதும் அவ்வாறே ஒழுகிப் பெற்றோர்ப் பேணும் அறத்தை மக்களுக்குப் போதிக்கிறான்.34 | முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்; தன்வினை தன்னையே சுடும் என்னும் கருத்துடைய இராமாயணக்கிளைக் கதை ஒன்று பௌத்த மதக் கோட்பாடுகளான கொல்லாமை, பெற்றோர்ப்பேணல், ஆள்வினையுடைமை என்னும் உண்மைகளை விளக்கும் நீதிக் கதைகளாகப் பரிணமித்துச் சீனா, ஜப்பான் எனப் பல்வேறுநாடுகளில் பல்லுருவம் பெற்று வழங்கி வரும் பண்பாட்டுப் பரிமாற்றப் பாங்கினை இவ்வரலாறு நமக்குஉணர்த்துகிறது. 2. இராமனின் ஏற்புநிலை அரசனாக முடிசூட்டிக்கொண்டு தனக்கு அரச பாரத்திலிருந்து விடுதலை அளிக்கவேண்டுமென்று தசரதன்கூறியதைக் கேட்ட இராமன் அச்செய்தியை ஏற்றுக்கொண்டநிலை, பின்னர்க் கைகேயியின்தலையீட்டால் வனம் போக நேரிட்ட சூழ்நிலையில், இராமனின் மனோநிலை, கோசலை முதலானவர்கள் வருந்தியபோது இராமன் கூறிய சமாதனங்களால் வெளிப்படும் இராமனின் பண்புகள் ஆகிய ஆளுமைக்கூறுகள்இராமனின் மனமுதிர்ச்சியைக் காட்டுவனவாய் அமைகின்றன. இக்கூறுகளை இராமகாதை பாடவந்த நூல்கள் தத்தம் காலப் பண்பாட்டுக்கேற்றவாறு படைத்துக் காட்டியுள்ளன. 2.1. பட்டாபிஷேகச் செய்தியறிந்த இராமனின் மனநிலை இராமனுக்கு முடிசூட்டக் கருதிய முடிவினைத் தசரதன் அரசவையிலேயே இராமனுக்குக் கூறுகிறான்.அதனைக் கேட்ட
34. Minoru Hara. PP. 353-354. |