14

ஒரு குறிப்பு

     இராமாயண ஆர்வலர்களும் தமிழர்களும் பெருமைப்படத்தக்க
இத்திருப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருப்பதி வேங்கடேசப்
பெருமாள் திருவருள் கணிசமான நிதிக்கொடையாகக் கிடைத்துள்ளமை
புத்தூக்கம் தரும் செய்தியாகும்.

     இக் காண்டத்தில் டாக்டர் மணவாளனின் ஒப்பிலக்கியக் கட்டுரை இடம்
பெறவில்லை. எல்லாக் காண்டங்களுக்கும் உரிய கட்டுரைகள் இறுதியில் ஒரு
தொகுதியில் வெளியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

     இலக்கணக் குறிப்புகள் பற்றிய விளக்கம், யாப்பிலக்கண விளக்கம்,
கதைக் குறிப்புகள் ஆகியவற்றின் தொகுப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
பயில்வோருக்கும் ஆய்வாளர்க்கும் உதவியாகக் கூடிய இவற்றைக் கடைசியில்
வெளியிட எண்ணியுள்ளோம்.

நன்றி

    இத்திருப்பணியில் நாட்டத்தை ஏற்படுத்தி வழிநடத்திவரும் அலகிலா
விளையாட்டுடைய தலைவர்க்கு முதலில் நன்றி செலுத்த வேண்டும்.
‘அலகிலா விளையாட்டுடையார்’ என்பதை இம் முயற்சியின் ஒவ்வொரு
கட்டத்திலும் உணரமுடிந்தது, உண்மை; வெறுஞ் சொல் அலங்காரம் அன்று.

     செந்தமிழருட் செம்மல் டாக்டர் கோவிந்தசாமி இட்ட கடை கால், அந்த
அளவிலே நின்றுவிடாமல், மேல் தொடர்ந்து கவிச் சக்கரவர்த்தியின் கவிதைத்
திருவுள்ளம் எழுந்தருளியுள்ள இம் மாபெரும் ஆலயத்தை உருவாக்கும்
கம்பன் அறநெறிச் செம்மல் திருமிகு ஜி.கே. சுந்தரம் அவர்களின் தளரா
ஊக்கம் மறக்கக் கூடியதன்று; ஒவ்வொரு கட்டத்திலும் எழக்கூடிய சிக்கல்களை
முன்னிறுத்திக் காட்டி, அவற்றை நீக்க வழியும் வகுப்பவர் அவரே.

     அடுத்து, இம்முயற்சிக்குப் பிள்ளையார் சுழி இட்ட நல்லாசிரியர்
இ.வேங்கடேசலுவுக்கு வணக்கம் செறிந்த நன்றி உரியது. பரம பாகவதராகிய
திரு. ஆர். துரைசாமி நாயுடு, சேவாரத்ன டாக்டர் ஆர். வேங்கடேசலு நாயுடு,
இளமைப் பொலிவுக்கு ஆக்கமான முயற்சி கொண்ட திரு. கிருஷ்ணராஜ்
வாணவராயர்-இவர்கள் இயக்கவே இயங்குவது இத்திட்டம்.
செந்தமிழருட்செம்மல் மறைந்தாலும், அவர் வழியை மறவாத திருமதி