25

ஆறு முதல் எட்டு நூற்றாண்டுகள் பக்தி இயக்கப் பெரும்புயலாக மாறியது. முதல் எட்டுச் சைவத் திருமுறைகளும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களும் தோன்றியது இக்காலகட்டத்தில்தான்.

     பரிபாடலில் கண்ட இக்கருத்து குலசேகரப் பெருமானின் உள்ளத்தில் ஊறி, இரண்டு பாடல்களாக வெளிவருவதைக் காணலாம்.

 "ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
 வானாளும் செல்வமும் மண்ணரகம் யான் வேண்டேன்"
     
(நாலா. 678)

"கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து
 இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
     
(நாலா. 681)

"வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
 கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்"
     
(நாலா. 683)

இப்பாடல்களிலிருந்து பக்தி இயக்கத் தாக்கம் எட்டாம் நூற்றாண்டளவில்
எத்தனை ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

     இந்திரன், வருணன் முதலியவர்களை முன்னிட்டு பலவகையான
வேள்விகளை இயற்றி, அவர்கள் பதத்தை அடைய வேண்டும் என்ற கருத்து
ரிக்கு, யசுர் ஆகிய வேதங்களில் பரவலாகக் காணப்படுகிறது. அதன்
மறுதலையாக இந்த இன்பங்கள் நிலைபேறுடையன அல்ல, எனவே
நிலைபேறுடைய மாறுபாடில்லாத வீட்டின்பத்தையே பெரிதெனக் கருதிப்
போற்றும் கருத்து தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது
என்பதை முன்னர்க் கண்டோம். அதே நேரத்தில் முழுமுதற் பொருளைப்
பற்றி இத் தமிழர்கள் கொண்ட கருத்தையும் உபநிடதங்கள் கூறும்
கருத்தையும் ஓரளவு இணைத்து விராதன் வதையிலும், சரபங்கன் பிறப்பு
நீங்கு படலத்திலும் விரிவாகக் கம்பநாடன் பேசுகிறான். உபநிடதங்களின்
தாக்கம் அவனை ஓரளவு பாதித்துள்ளது என்பதைப் பின்னர்
யுத்தகாண்டத்தில் வரும் இரணியன் வதைப் படலத்தில் 6249 முதல் 6264
வரையுள்ள 15 பாடல்களில் பரக்கக் காணலாம்.

     பின்னர்ச் சுந்தர காண்டத்தில் பிணி வீட்டு படலத்தில் "நீ யார் என்று"
இராவணன் கேட்ட வினாவிற்கு விடை கூறும் முகமாகப் பரம்பொருள்