27

இலக்குவன் தமையனும் ஆகிய ஒருவனை எத்தகையவன் என்பதை நாம் அறியுமாறு முதலிரண்டு படலங்களில் காட்டிய கவிஞன், அகத்தியப்
படலத்தில் பரம்பொருளேயாயினும் மானுட உருத் தாங்கி வந்தமையானும்,
வில்லெடுத்துப் போர் செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாலும், அதற்குரிய
படைக்கலங்களை அகத்தியன் வழங்கினான் என மூன்றாவது படலத்தில் கூறி
விடுகிறான். ஆக, இராவண வதத்திற்கு வேண்டிய அனைத்தும் தயாராக
உள்ளன. அந்த வதம் நிகழ ஒரு காரணம் வேண்டியுள்ளது. அக்காரணத்தின்
விரிவை எஞ்சியுள்ள படலங்களில் கவிஞன் விவரிக்க முற்படுகின்றான்.

     ஆரணிய காண்டத்தில் நான்காவது படலமாக அமைந்துள்ளது சடாயு
காண் படலம். பத்தாவதாக உள்ளது சடாயு உயிர்நீத்த படலம். உலக
இலக்கியங்களில் விலங்குகளும், பறவைகளும் இடம் பெறுகின்றன என்றாலும்,
கம்பநாடன் கற்பித்தது போன்ற ஓர் அற்புதத்தை உலக இலக்கியங்களில்
மட்டும் அல்லாமல் மூல நூலாகிய வான்மீகத்திலும் காண்டல் அரிதாகும்.
சடாயு என்ற பறவையை ஒப்பற்ற முறையில் உருவாக்கி, தன் உயிர் புகழ்க்கு
விற்ற (5305) சடாயு என்று பேசுமாறு அப்பாத்திரத்தை அமைத்து விடுகிறான்.
தந்தையை இழந்து வருந்தும் இராகவன் தசரதனின் உயிர்த்தோழனாகிய
சடாயுவைச் சிறிய தந்தையாகவே ஏற்றுக்கொள்ளுகிறான். அச்சிறிய தந்தையும்
மைந்தர்களைத் திருத்த வேண்டிய சூழ்நிலையில் கருணை காட்டாமல்
கண்டித்துத் திருத்துமாறு ஒரு காட்சியை அமைத்துக் காட்டுகிறான். சினம்
என்ற சொல்லுக்கே பொருள் தெரியாதவன் இராகவன். மிகக் கடுமையான
இராம-இராவண யுத்தம் பற்றிக் கூற வந்த இராவணன் அப்போரின் இடை
இராகவன் மனநிலையையும், முகபாவத்தையும் பின்வருமாறு கூறுகிறான்:

 எறித்த போர் அரக்கர் ஆவி எண்
    இலா வெள்ளம் எஞ்சப்
பறித்த போது, என்னை அந்தப்
    பரிபவம் முதுகில் பற்றப்
பொறித்த போது, அன்னான் அந்தக்
    கூனிகூன் போக உண்டை
தெறித்த போது ஒத்தது அன்றி, சினம்
    உண்மை தெரிந்தது இல்லை. (7288)

இந்நிலையில்கூடச் சினம் கொள்ளா இராகவன் ஒரு முறை சினம்
கொள்கிறான். பிராட்டியை இராவணன் வஞ்சனையால் கவர்ந்து
சென்றபொழுது அதனைப் பார்த்துக் கொண்டு வாளாவிருந்த மக்கள்,