34

சிந்தனையுள் செலுத்திவிட்டது. கரன் முதலியோரையும் அவர்களுடைய
ஆற்றலையும் நன்கு அறிந்தவன் இராவணன். அப்படியிருக்க மூன்று
நாழிகையில் இரண்டே மனிதர்கள் கரன் முதலிய அனைவரையும் விண்ணில்
ஏற்றினர் என்றால், இது நம்பக் கூடியதாக இல்லை. ஆனாலும் இதனை
நேரில் பார்த்த தங்கை இதற்குச் சான்று பகர்கின்றாள். எனவே, இது மறுக்க
முடியாத உண்மையாகும். பகைவாகளாகிய இந்த இருவர் யார், எத்தகைய
ஆற்றல் உடையவர்கள், மனிதர்களில் இத்தகையோர் இருக்க முடியுமா?
இவர்களை எப்படிச் சந்திப்பது, சமாளிப்பது என்ற நீண்ட யோசனையில்
மூழ்கிய இராவணன், இவ்வளவு ஆற்றல் உடையவர்கள் யாதொரு
காரணமின்றி ஒரு பெண்ணுக்கு இத்தகைய தீங்கு இழைத்திருக்க மாட்டார்கள்.
அந்தக் காரணத்தை அறிய வேண்டும் என்ற எண்ணத்தில்தான்,
இராவணேசுவரனாகிய தன்னுடைய தங்கையை மானுடர் இருவர் மூக்கரிந்தனர்
என்றால், "அவர்களிடை நீ செய்த குற்றம் யாது" என்று வினாவினான்.
இத்தகைய தண்டனை கிடைக்க வேண்டுமானால் அதற்குரிய குற்றத்தைத் தன்
தங்கை இழைத்திருப்பாள் என்று கருதினான் இராவணன். இது வரை ஒரு
சிறந்த அரசன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படியே நடந்து
கொள்கிறான் இராவணன். ‘நீ இழைத்த குற்றம் யாது’ என்ற வினாவை
சூர்ப்பணகை எதிர்நோக்கியிருந்தாள்.

     உடனே பதின்மூன்று பாடல்களில் சீதையைப் பாதாதிகேசமாக
வருணித்து இராவணன் மனத்தில் காமவெறி காட்டுத் தீப் போல் பரவ வழி
செய்து விட்டு இறுதியாக,

 "அன்னவள் தன்னை நின் பால்
     உய்ப்பல் என்ற எடுக்கலுற்ற என்னை,
அவ் இராமன் தம்பி
     இடை புகுந்து,
இலங்குவாளால் முன்னை
     மூக்கு அரிந்துவிட்டான்..."    (3147)

என்று கூறுவதன் மூலம் தன் எண்ணத்தை முடித்துக் கொண்டு விட்டாள்.
இனி எவ்விதத் தூண்டுதலும் இல்லாமல் இராவணன் சீதையைக் கவர்வதும்,
இராமனுடன் போர் புரிவதும் நடைபெறும் என்று எதிர்பார்த்தாள்.

     கரனைப் போல இராவணன் முன்யோசனை இல்லாமல் எதனையும்
செய்யத் தொடங்கமாட்டான் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாலும்
இராவணன் சூழ்ச்சி எந்தத் திசையில் செல்லும் என்பதை அவள் அறிய
முடியவில்லை. தங்கை மூக்கினை அரிந்து அரக்கர் குலத்திற்கே அவமானம்
இழைத்தவர்களை அழிப்பதா அல்லது தங்கையால் புகழப்பெற்ற