முதலாகிய எந்த மனிதருக்கும் கிட்டவில்லை; எங்கோ காட்டில் வாழ்ந்த பறவைக்குக் கிடைத்தது என்றால், இறைவனுடைய கருணை எங்கு, எப்பொழுது யாரிடம் பாய்கிறது என்பதைச் சொல்ல முடியாது என்பதை அறிந்துகொள்கிறோம். அடுத்துள்ள அயோமுகிப் படலத்தில் இலக்குவனுடைய பண்பாட்டின் சிறப்பை அறிய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. விசுவாமித்திரனுடைய ஆணையைச் சிரமேற் கொண்டு தாடகை மேல் அம்பு செலுத்தி அவளைக் கொன்றான் அவ் இராகவன். இப்பொழுது அயோமுகி என்ற பெண் அரக்கியைக் கொல்லாமல் மூக்கரிந்து அவளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான் இலக்குவன். அவள் அரற்றிய சத்தத்தைக் கேட்ட இராகவன், பின் தன் தம்பியிடம் நிகழ்ந்தது யாது என்று கேட்கிறான். அடுத்துப் "போர்வல் அரக்கியை கொன்றிலை போலுமால்" (3630) என்று இராகவன் கேட்க, | துளைபடு மூக்கொடு செவி துமித்து உக, வளை எயிறு இதழொடு அரிந்து, மாற்றிய அளவையில், பூசலிட்டு அரற்றினான்’. (3631) |
என்று விடையிறுத்தான். இங்கே இளையவன் இருகை கூப்பியதற்கு ஒரு காரணம் உண்டு. ‘கொன்றிலை போலுமால்’ என்ற அண்ணன் வினாவிற்குத் தம்பி விடையிறுக்கத் துணியவில்லை. உண்மையான விடையைக் கூறுவதாக இருப்பின் அரக்கியேயாயினும் அவள் பெண் என்ற காரணத்தால் கொல்லாமல் விட்டுவிட்டேன் என்று கூறியிருக்க வேண்டும். அப்படிக் கூறியிருப்பின் தாடகை வதம் செய்த அண்ணனைச் சுட்டிக் காட்டுவது போல் இருக்கும். தான் வழிபடும் தெய்வமாகிய இராகவன் எதிரே அதனைச் சொல்லத் துணியாமல் ‘அன்பு கூர்ந்து’ மேலே ஒன்றும் கேட்க வேண்டாம் என்று கூறுபவன் போல இளையவன் இரு கை கூப்பினான். தம்பியின் பண்பாட்டினை அறிந்து கொண்டு பெரு மகிழ்வுற்ற இராகவன் அவனை இறுகத் தழுவிக்கொண்டு ‘மனுநெறி தவறாதவனே என்று வாழ்த்துகிறான். இதனைக் கூற வந்த கவிஞன் மிக அற்புதமாக, அண்ணன் தம்பி இருவரிடையே நடைபெற்ற நாடக்தையே பின்வரும் பாடலில் காட்டுகிறான். | "தொல் இருள், தனைக் கொலத் தொடர்கின்றாளையும் கொல்லலை; நாசியைக் கொய்து நீக்கினாய்; வல்லை நீ; மனு முதல் மரபினோய்! என, புல்லினன்-உவகையின் பொருமி விம்முவான்" (3632) |
அடுத்து வருவது கவந்தன் படலமாகும். இதுவரை கண்ட |