38

பகுதிகளில் இராம இலக்குவர்கள் தனித்தனியே போரிட்ட நிகழ்ச்சியைக்
கண்டோம். தமையன் தம்பி இருவரும் ‘கூட்டு ஒருவரையும் வேண்டாத
கொற்றவர்கள்’ என்பது உண்மைதான். என்றாலும், பின்னே நிகழப்போகும்
பெரும்போரில் இருவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகப்
போகிறது. எனவே, இருவரும் ஒன்றாக இணைந்து ஒருமுகமாக
(Co-ordinated action) பணி செய்ய வேண்டிய சூழ்நிலைக்குக் கவந்தன்
வதை முன்னோடியாகும். சகோதரர்கள் இருவரும் மாபெரும் வடிவுடைய
கவந்தனின் தோள்கள்மேல் ஒரே நேரத்தில் ஏறி, ஒரே நேரத்தில்
அவனுடைய இரு தோள்களையும் வெட்டி வீழ்த்துகின்றனர். இதற்கு
அப்பாலும் இப்படலத்தில் ஒரு சிறப்பு உண்டு. இப்படியே பெண்ணைத்
தேடிக் கொண்டு இருவரும் சென்றால் கிட்கிந்தையைக் கடக்க நேரிடும். வாலி
இவர்களைச் சந்தித்தால் அவதார நோக்கம் நிறைவேறாமல் போய்விடும்.
எனவே, காந்தருவ வடிவில் தோன்றிய கவந்தன், இரலைக் குன்றில் அஞ்சி
வாழும் சுக்கிரீவனிடம் செல்லுமாறு வழி கூறுகிறான். அன்றியும் இடையே
மதங்காசிரமத்தில் சவரியைப் பற்றியும் கூறி, அவளைச் சென்று சந்திக்குமாறு
பரிந்துரை செய்கிறான். இவன் இவ்வாறு கூறும்பொழுது சகோதரர்கள்
பெருமை அறியாது குரங்குப் படைகளை உதவிக்கு அழைத்துக் கொள்ளப்
பரிந்துரை செய்தான் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. இதனை
மனத்துட் கொண்ட கவந்தன் ஐயனே! உனக்கு எவ்விதத் துணையும்
தேவையில்லை, என்றாலும் ஒன்று கேள். ‘திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்
தன் கணங்களையெல்லாம் படைகளாக்கி அழைத்துச் சென்றான்’ என்று
எடுத்துக் காட்டிக் கூறுவதில் ஒரு நயம் உள்ளது. மேருவை வில்லாகவும்
திரிபுர சம்ஹாரம் செய்தான். இந்த உதாரணத்தினால் ‘குரங்குப் படைகள்
உடனிருப்பது உன்னைக் காப்பதற்கல்ல. நீ ஒருவனே இராவண வதம்
செய்யப்போகின்றாய், என்றாலும், அப்படை உடனிருப்பது
பொருத்தமானதாகும்’ என்ற கருத்து கவந்தன் சொற்களில் வெளிப்படுகிறது.

     அடுத்துள்ள சவரிப் படலம், சவரி பிறப்பு நீங்கு படலம் எனப் பெயர்
பெறும். சரபங்கன், சவரி என்ற இருவரையும் இராகவன் தானே தேடிச்
செல்கிறான். ஞானியாகிய சரபங்கனும், கல்வி அறிவின்றேனும் ஒப்பற்ற
பக்தையாகிய சவரியும் திருவடி தரிசனம் பெற்ற பிறகு பிறப்பு நீங்குகின்றனர்.
அறிவின் துணை கொண்டு ஞானம் அடைந்த சரபங்கனும், உணர்வின் துணை
கொண்டு பக்தையாக மாறிய சவரியும் ஒரே வீடுபேற்றை