28

தீவினை இயற்றுமேனும், எம்பிமேல் சீறி, என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்.
            (4068)

     பின்னர் நடந்த நிகழ்ச்சிகளைக் காணும்போது வாலியின் அறிவுத் திறமும்,எதிரது கண்டு போற்றும் நுண்மாண் நுழைபுலமும் அவன்
தம்பிமாட்டுக்கொண்ட ஈடு இணையற்ற அன்பும் நன்கு வெளிப்படுகின்றன.

     வாலியைப்பற்றி இதுவரை கூறிவந்தவை கம்பனுடைய 'சான்றோர்
கவியெனக் கிடந்த' சில பாடல்களின் புதைந்து கிடக்கும் உட்பொருளைஅடி
யொற்றி எழுந்த சிந்தனைக்கு வடிவு கொடுத்தமையே ஆகும்.இக்கருத்துகள்
காட்டப்பெற்ற பாடல்களில் வெளிப்படையாக எங்கும்காணப்படா. முன்னும்
பின்னுமாக உள்ள பாடல்களை ஒன்று கூட்டி வாலிஎன்ற பாத்திரப்படைப்
பின் நுணுக்கத்தை ஆய முற்பட்டதன் விளைவேஆகும் இது. 'இராம' என்ற
பதத்தைக் காண்பதற்கு முன்னுள்ள வாலிக்கும்சிறியன சிந்தியாத வாலிக்கும்
இடையே உள்ள வளர்ச்சியைக் கூறியதே ஆகும்இது. இந்த வளர்ச்சி சில
மணித்துளிகளில் நடைபெற்றதாகும். அம்புபட்டதேவிதையாகி 'இராம' என்ற
பெயரைக் கண்டதே செடியாக வளரத் தொடங்கியநிலையாகி, கார்முகில்
கமலம் பூத்து மண்ணுற்றதைக் கண்ணுற்றான் வாலிஎன்ற நிலையில் அந்த
செடி மரமாக வளர்ந்துவிட்டது. ஆனாலும், இந்தவிதை விதைப்பும், அது
செடியாகி மரமாதலும் வாலியின் புற மனத்திற்குத்தெரியாமல் அவனுடைய
அக மனத்தின் ஆழத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள்ஆகும். அக மனத்தின்
ஆழத்தில் இப்பெரு நிகழ்ச்சி நடைபெறுகின்ற அதேநேரத்தில் வாலியின்
புற மனத்தில் ஒரு பெரும் போராட்டமே நிகழ்கிறது.

     அப்போராட்டத்தின் தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்பவற்றைச் சற்று
விரிவாகக் காண்பது பயன் உடையதாகும்.  சுக்கிரீவனிடம் போருக்குப்
புறப்படுமுன் தடுத்து நிறுத்திய தாரையிடம் வாலி பேசிய பேச்சுகள் தசரத
குமாரனைப்பற்றி அவன் கொண்டிருந்த மிக உயர்ந்த எண்ணங்களின்வெளிப்
பாடு ஆகும். அந்த நிலையில், தாரையை விட்டுப் புறப்பட்டவுடனேயே
தம்பிக்குத் துணைவர்கள் வந்துள்ளார்கள் என்ற செய்தியை அடியோடு
மறந்துவிட்டான் வாலி.

தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்.               (3969)

தாரையிடம் இறுதியாக வாலி கூறிய சொற்கள் இவை யென்பதை
நோக்கும்பொழுது இராகவன் போரின் இடையே சுக்கிரீவனுக்குத்