31

வாழும் இவ் விலங்குகள் சமுதாயத்தில் ஏற்றிப் பேசுவது முறையாகாது' என்ற
கருத்தில்,

'அத்தா! இது கேள்' என, ஆரியன் கூறுவான், 'இப்
பித்து ஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ?
எத் தாயர் வயிற்றினும், பின் பிறந்தார்கள் எல்லாம்
ஒத்தால், பரதன் பெரிது  உத்தமன் ஆதல் உண்டோ?        (3977)

என்று கூறுகிறான்.

     போரின் முன்னர் இவ்வாறு பேசிய இராகவன், அது முடிந்த பிறகு
வாலியிடம் 'கற்றறிந்த நீ விலங்கன்று; தேவர்களோடு ஒப்பு ஆவாய்' (4054).
எனவே, நீ செய்தது தவறுதான்' என்று கூறுவது பொருந்துவதாக இல்லை.

     இறுதியாக, வாலி மிகவும் சங்கடமான வினாவை எழுப்புகிறான்.
இராமனை நோக்கி, வாலி, 'போனவை போகட்டும். இனி நான் கேட்கப்
போகும் ஒரு வினாவிற்குமட்டும் விடை தருவாய்' என்ற முறையில்,
''வெவ்வியபுளிஞர் என்ன, விலங்கியே மறைந்து வில்லால், எவ்வியது
என்னை?'' என்றுவினாவுகிறான். இந்த வினாவிற்கு இலக்குவன் முன்னே
வந்து, ''உன்னைக்கொல்வதாக உன் தம்பிக்கு வாக்குக் கொடுத்து
விட்டபடியால், நீயும் வந்துசரணம் என்று அடியில் வீழ்ந்தால் என்ன
செய்வது என்ற கருத்தில்தான்மறைந்து நின்று அம்பு தொடுத்தான்'' என்று
விடை கூறியதாகப் பாடல்அமைந்துள்ளது. இவ்விடை எவ்வளவு போலித்
தனமானது என்பதை எளிதில்விளங்கிக்கொள்ள இயலும். மறைந்து நின்று
அம்பு எய்யவேண்டு மென்றுஇராமன் எப்போதோ முடிவுசெய்துவிட்டான்.
சுக்கிரீவனிடம்பேசிக்கொண்டிருந்த போதே ''வேறுநின்று எவ்விடத் துணிந்து
அமைந்தது;என் கருத்து இது'' (3944) என்று கூறுகிறான். ஆதலால்;
அண்ணன் தம்பிபோர்க் களத்தில் இராகவன் திடீரென்று இம்முடிவிற்கு
வந்தான் என்றுகூறுவதுபோல இலக்குவன் பேசுவது பொருத்தமற்றதாகும்.
இராகவன்இவ்வினாவிற்கு விடை கூற முடியாமையால்தான் இலக்குவன்
முன்வந்து இந்தச்சமாதானத்தைக் கூறுகிறான். இதனை அடுத்து வரும்
பாடலுக்கு உரைகாண்பது சற்றுக் கடினமாக உள்ளது.

கவி குலத்து அரசும் அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்
அவியுறு மனத்தன் ஆகி, 'அறத் திறன் அழியச் செய்யான்'
புவியுடை அண்ணல்' என்பது எண்ணினன் பொருந்தி, முன்னே
செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சிச் சொன்னான்;
                                                   (4060)