யின்மை, நீதி - அநீதி, பகை - நட்பு, பகல் - இருள் என்பவற்றிடையே மிகுந்த வேறுபாட்டை அவனால் காணமுடிந்தது. ஜெட் விமானத்தில் போகின்றவனைப் போல, 'உபதேசம்' பெற்றுப் பரஞானம் பெற்ற வாலி கற்பனைக்கு அடங்காத அளவு வளர்ச்சி பெற்ற நிலையில் மேலே கண்ட வேறுபாடுகள் மங்கி மறைந்து விடுகின்றன. எனவே, இராம என்ற மந்திரத்தைக்கண்ணுற்றதும், கூர்வாளியால் அறிவு பெற்றதும் நடைபெற்ற பிறகு இராமன்கூறிய சொற்கள் (அன்ன கட்டுரை) கருத்துள் புகுந்தவுடன் முழுமன மாற்றம்ஏற்பட்டுவிடுகிறது. அந்த நிலையில் வாலி பேசத் தொடங்குவது நம்மைஅதிர்ச்சி கொள்ளச் செய்கிறது. வாலியின் மன மாற்றத்தைஅறிந்துகொள்ளக்கூடிய அளவு நாம் உயர்ந்தாலொழிய நாம் புரிந்துகொள்ளமுடியாது. 'அற வேலியைப் படுத்தாய்', 'பண்பு ஒழிந்தாய்' என்பன போன்றசொற்களால் எந்த இராமனைச் சாடினானோ அதே இராமனை 'உயிர்கட்குத்தாய் போன்றவன்', 'சாத்திரங்களின் அறநெறியில் நிற்பவன்' என்றெல்லாம்பேசத் தொடங்குகிறான். தாய்என உயிர்க்கு நல்கி, தருமமும், தகவும், சால்பும் நீ என நின்ற நம்பி! நெறியினின் நோக்கும் நேர்மை நாய் என நின்ற எம்பால், நவை அற உணரலாமே? தீயன பொறுத்தி என்றான் - சிறியன சிந்தியாதான். (4061) சில விநாடிகளுக்குமுன்னர் அம்பின்மூலம் தன் உயிரைப் போக்கி நிற்கும். ஒருவனைப் பார்த்து 'உயிரைக் காப்பதில் தாய் போன்றவனே! தருமம்,சால்பு உடைமை என்பவற்றின் மொத்த உருவாக உள்ளவனே!' என எப்படிக்கூற முடிந்தது? குழந்தையின் தேவைக்கு அவசியமானால் அக் குழந்தையின்கால்கைகளைப் பிடித்துக் கொண்டு தாங்கமுடியாத கசப்பு மருந்தைப்புகட்டுவதைக் காண்கிறோம். கசப்பு மருந்தைப் புகட்டுவதால் தாய் அன்பில்லாதவள் என்று கூறுவது எவ்வளவு அறிவீனமோ அவ்வளவு அறிவீனமானது இராமன் செயலைக் குறை கூறுவது. கசப்பு மருந்து குழந்தையின் நோயைப் போக்கி வாழ வைக்கின்றது. வாலியைப் பற்றியிருந்த நோய்கள் பல. கல்வி கேள்விகளால் வந்த ஆணவம். தோளினால் வந்த ஆணவம் (3823), உலைவுஇல் பூதம் நான்கு உடைய ஆற்றலினால் (3824-2) வந்த ஆணவம்,. பொரக் கிட்டுவாரின் வலிமை பாகம் எய்துவதனால் வந்த ஆணவம் (3825-2). இவை, அனைத்தையும்விட 'நான் இறைவனுக்குப் பணி செய்கின்றேன்' என்ற எண்ணத்தால், அதாவது அட்டமூர்த்திதாள் பணியும் ஆற்றலால் (3825-4) வந்த ஆணவம் ஆகிய பல நோய்கள் அவனைப் பற்றியிருந்தன. உடல் வன்மை உடையவர்களின் உள்ளே இருந்து அரிக்கும் நோய்களை எளிதில் அறிந்துகொள்ள முடியாது. மருத்துவன் |