42

கை அறு துயரம் நின்னால் கடப்பது. கருதி வந்தேம்
ஐய! நின் -தீரும்                                    (3809)

இந்த அடிகள் தன் துயரைப் போக்க உதவும் மலை போல நம்பி வந்தான்
என்பதைக் குறிக்கின்றன. அதனால் இராகவனுடைய இந்த வேண்டுகோளைக்
காதிற்கூட வாங்கிக்கொள்ளாத சுக்கிரீவன், ஒரு பாடல் முழுவதும் தான்படும்
துன்பத்தைப் பெரிதாகக் கூறி, 'உயிரை விடத் தைரியம் இல்லை. ஆகவே
நின்னிடம் சரணம் புகுந்தேன்' என்று கூறுகிறான். இந்த நிலையில் யாரால்
இந்தத் துயரம் சுக்கிரீவனுக்கு நிகழ்ந்தது என்பதை அரைகுறையாக இராமன்
அறிந்திருந்தானேதவிர, வாலி சுக்கிரீவன் பகைமை முதலியனவற்றையும்
அதன்காரணத்தையும் இராமன் அறிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும்,
இரண்டுபாடல்களில் இராமன் சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்குகள்
நடுநிலையுடன்காப்பியத்தைக் கற்பவர்க்கு வியப்பைத் தருவதாகும்.
சுக்கிரீவனுடையதுன்பத்திற்குக் காரணம் யார் என்பதை அறிந்துகொள்ளும்
முன்னரே தசரதகுமாரன்,

''உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள, முன்நாள்
சென்றன போக, மேல் வந்து உறுவன தீர்ப்பல்''             (3811)

என்றும்,

''மற்று, இனி உரைப்பது என்னே? வானிடை, மண்ணில், நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார் . . . .                        (3812)

என்றும் அவசரப்பட்டு, இரக்கம் காரணமாக, இராகவன் கொடுத்த வாக்கே
பெருவியப்பைத் தருவதாகும். ஒரு பொருளை முழுவதும் அறியாமல் வாக்குக்
கொடுத்துவிட்டுப் பிறகு அந்த வாக்கைக் காப்பதற்காகச் சில வேண்டாத
செயல்களையும் செய்ய நேரிடுகிறது. சுக்கிரீவன் பகைவன் யாராக இருப்பினும்,
அவனை ஓர் அம்பால் விண்ணுலகம் உய்ப்பதும், கூட்டு ஒருவரையும்
வேண்டா அக் கொற்றவனுக்கு இயலும்.  அளவு மீறிய இரக்கமும் தன்
ஆற்றல் பால் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையும் சேர்த்து இராமனை
'நின்னைச் செற்றார் என்னைச் செற்றார். தீயரே எனினும் நினக்கு உற்றார்
எனக்கும் உற்றார்' எனப் பேச வைக்கிறது. இவ்வாறு வாக்குக் கொடுத்த
பிறகுதான் சுக்கிரீவனின் பகைவன் யாரென்பதை முதன்முதலாக இராகவன்
அறிகிறான். வாலியின் வீரம்பற்றி அனுமன் கூறிய அத்துணைச் செய்திகளும்
சிவதனுசை ஒடித்து, பரசுராமன் வில்லை வளைத்து, கர தூடணர்
முதலியவர்களை விண்ணுலகம் அனுப்பிய வீரனுக்கு வாலியின் வீரம்பற்றிய