43

வரலாறு எவ்வித அதிர்ச்சியையும் வியப்பையும் தரவில்லை என்பது
உண்மைதான். அனுமன் கூறிய வரலாற்றில் இடையே இராகவனை
அசத்துகின்ற ஒரு செய்தியும் அனுமனால் கூறப்பெற்றது.

கிட்டுவார் பொரக் கிடைக்கின், அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று,
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்.                (3825)

என்ற செய்திதான் அது.  இந்தப் பாடலை நன்கு சிந்தித்தோமானால்,
முதலிரண்டடிகளால் வாலி ஆற்றலின் தனிச்சிறப்பையும், பின்னிரண்டு
அடிகள்அவ் ஆற்றலுக்குரிய காரணத்தையும் உணரமுடிகிறது. மேலும்,
இராவணன்போன்ற அரக்கர்களைப் போல என்றோ ஒரு காலத்தில் தவம்
செய்துஅதனால் பெற்ற வரங்களை முதலாக வைத்துக்கொண்டு, பிறர்க்குக்
கொடுமைசெய்யும் கொடுமையுடையவன் அல்லன் வாலி என்ற உண்மையான
கருத்தும்இப்பாடலின் மூன்றாவது அடியில் நுணுக்கமாக வைக்கப்பட்டுள்ளது.
எட்டுத்திசைகளின் எல்லை இறுதிவரை சென்று அட்ட மூர்த்தியாகிய
சிவபிரானேநாள்தோறும் (நாளும் உற்று) வழிபாடு செய்கின்ற இயல்பினன்
வாலி என்பதைஅனுமன் கூறிவிடுகின்றான். என்றோ பெற்ற வரபலம் அன்று;
நாள்தோறும்வழிபாடு செய்வதால் பெறும் வலமாகும், கிட்டுவார் பட்ட
நல்வலம் பாகம்எய்தும் சிறப்பு.  இதனால் இராகவற்குச் சிந்தனை பிறந்தது.
அனுமன் கூறியவரலாற்றில் வாலி யாருக்கும் தீமையோ கொடுமையோ
செய்ததாகக்கூறவில்லை.  சுக்கிரீவன்மாட்டு அவன் கொண்ட பகைமைக்கும்
காரணம்விளக்கப்பெற்றுவிட்டது. தான் கடைந்தெடுத்த அமிழ்தத்தைத் தான்
உண்ணாமல் தேவர்களுக்குத் தந்துவிட்ட ஒருவனை எப்படித் தவறாக
எடைபோட முடியும்? தம்பி மனைவியை நயந்தான் என்பது விலங்குகளின்
வாழ்க்கை முறை.  அதனைப் பெரிதுபடுத்த இயலாது என்பதையும் இராகவன்
அறிந்திருந்தான்.

     'பகைவன் யார், ஏன் பகைவன் ஆனான் என்பவற்றை அறியும்
முன்னரே 'உன் பகைவர் என் பகைவர்' என வாக்குத் தந்ததாலும் வாலியைக்
கொல்வது இன்றியமையாக் கடமை யாகிவிட்டது. வாலியைக் கொன்றால்தான்
'தாரமோடு தலைமையும் சுக்கிரீவனுக்குத் தர முடியும்'. வாலியைக்கொல்ல
வேண்டு மென்றால் பட்ட நல்வலம் பாகம் எய்தும் ஒரு வரம் குறுக்கே
நிற்கிறது. வரத்தைத் துஷ்பிரயோகம் செய்திருந்தால், அவ்வரங்கள்
பலமிழந்திருக்கும். இராவணன், இந்திரசித்துப் போன்றவரின் வரங்கள்
பலமற்றுப் போனமைக்கு இதுவே காரணமாகும்.  ஆனால், வாலியைப்
பொறுத்தமட்டில்