பிறர்க்கு இன்னா செய்கின்றவள். வாலியைப் பொறுத்தமட்டில் அதுவும் இல்லை. இந்த நிலையில் வாலியைக் கொல்வதற்கு, சுக்கிரீவனிடம் கொடுத்த வாக்கைக் காப்பதற்கு - சவரி கூறிய அறிவுரையை ஏற்பதற்கு ஒரே வழிதான்' உண்டு. அந்த வழியை மேற் கொள்வதானால் நல்வலம் பாகம் எய்துகின்ற ஒரு தடையுளது. இத் தடையை மீறவேண்டு மானால் ஒரே வழிதான் உண்டு. அந்த வழி தான் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு இராமன் மேற்கொள்கின்ற முடிவாகும். அந்த வழி 'வேறு நின்று எவ்விடத் துணிந்தது' என்பதாகும். நீண்ட யோசனைக்குப் பிறகு தான் இம்முடிவுக்கு வந்தேன் என்பதைச் சுக்கிரீவனுக்குச் சொல்லும்பொழுது 'இது என் கருத்து' என்று கூறி முடிக்கின்றான். எதிர்ப்பட்ட தர்மசங்கடத்திலிருந்து மீள, மறைந்து நின்று அம்பு தொடுத்துவாலியைக் கொல்வது என்ற முடிவிற்கு இராமன் வந்து விட்டான். இம்முடிவைஇராமன் விரும்பி ஏற்றுக்கொண்டான் என்றோ கடமையை நிறைவேற்றப்போகிறோம் என்று மகிழ்ந்து ஏற்றுக் கொண்டான் என்றோ கூறுவதுபெருந்தவறாகும். மறைந்து நின்று அம்பு எய்தல் வில் அறம் துறப்பதாகும்.வில் அறம் துறக்காமல் இருக்கவேண்டு மானால் வாலியைக் கொல்ல இயலாது.அது நடைபெறவில்லையானால் 'தாரமோடு தலைமையும் தருகிறேன்' என்றுசுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாது. வாக்கை நிறைவேற்றுவதா? அல்லது வில்லறம் துறப்பதா? - என்பது தான்இராமன் அகப்பட்டுக் கொண்ட தர்மசங்கட நிலையாகும். சுக்கிரீவனுக்குக்கொடுத்த வாக்கின் அடிப்படையில் சவரியும் கவந்தனும் ஆற்றுப்படுத்தியதன்நோக்கம் அமைந்துள்ளது. எனவே, சுக்கிரீவனைத் துணைகோருவதுஇன்றியமையாதது என்ற கருத்தில் தான் அவனுக்கு வாக்குக் கொடுத்தான்இராகவன். கொடுக்கின்ற காலத்தில் 'விண்ணிடை, மண்ணில் நின்னைச்செற்றவர், என்னைச் செற்றார்' என்றுதான் இராமன் கூறினான். யாராகஇருப்பினும், அவர்களைத் தன் வில் கொண்டு வெல்ல முடியும் என்ற துணிவுடன், இராகவன் சுக்கிரீவனுக்கு வாக்குக் கொடுத்தான் அவன் சற்றும் எதிர்பாராமல் பகைவனாகிய வாலிக்கும் அவனுக்கும் இடைய 'நல்வலம் பாகம்எய்தும்' தடை ஏற்பட்டது. இராகவனே யானாலும் இத்தடையை வெல்ல முடியாது. தன் வலியும் பகைவலியும் தீர எண்ணிப் பார்த்த இராகவன் மறைந்து நின்று அம்பு, தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற ஆழ்ந்தஆராய்ச்சிக்குப் பிறகு அறிந்துகொண்டான். ஆதலின் 'இது என் கருத்து'என்று கூறிவிட்டான். இச்செயல் வில்லறம் துறக்கும் செய்கையாகும் என்பதையும் |