இராகவன் நன்கு அறிந்திருந்தான். அறிந்தே செய்த செயல் ஆகும் இது. வில்லறம் துறந்து ஏதோவொரு குரங்கை - சுக்கிரீவன் பகைவனாகிய வாலியைக் கொல்லப் போகிறோம் என்று நினைத்தானே யொழிய, அத்தகைய பகைவன் கல்வி, அறிவு, பண்பாடு, உபகாரச் சிந்தை, தன்னலமின்மை, அஞ்சாமை ஆகிய பண்புகளில் தலைநின்றவன் என்பதையும் சுக்கிரீவனுக்கும் வாலிக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு இருப்பதையும் அறியவில்லை. வாலியின் முற்பகுதி உரையாடன், பிற்பகுதி உரையாடல் என்பவற்றின் மூலமே இராகவன் அவற்றை அறிந்து கொண்டான். நுண்மாண் நுழைபுலம் மிக்கவனும், தேர்ந்த அரசியல் ஞானியும், எதிர் நிற்பவனை ஒரு கணத்தில் எடைபோட வல்லவனும் ஆகிய தசரதன் தோன்றல்வாலியின் உரையாடலை வைத்துக் கொண்டே 'இவன் இத் தகையவன்'என்பதையும் அவன் அரசாட்சி எவ்வாறு இருந்திருக்கும் என்பதையும் ஒருவிநாடியில் அறிந்து கொள்கிறான். அவனுடைய வருத்தத் திற்கும், அங்கதனிடம்'நீ இது பொறுத்தி' என்று கூறுவதற்கும் இதுவும் ஒரு காரணமாய் அமைந்தது.சுக்கிரீவனுக்கு முடிசூட்டி அவனைக் கிட்கிந்தைக்கு அனுப்பும் போது அவனதுஅரசியல் அறிவோ, புலமையோ, ஞானமோ அறிந்தவன் அல்லன் என்பதைஅறிந்திருந்த இராமன் அரசனுக்குரிய அறவுரைகள் பலவற்றை அரசியற்படலத்தில் 4121 முதல் 4131 முடிய 11 பாடல்களில் சுக்கிரீவனுக்கு இராகவன்கூறுகிறான். எல்லையற்ற செல்வம் திடீரென்று வந்தால் அதனைக் காத்தலும்வகுத்தலும் எவ்வளவு கடினமானது என்பதைக் (4124) கூறுகிறான். இத்துணைஅறவுரைகள் கூறும் இராகவன் வாலியைப்பற்றியும், அவன்அரசாட்சியைப்பற்றியும் சுக்கிரீவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால்,அதே நேரத்தில் சுக்கிரீவனை அனுப்பிய பிறகு அனுமனைத் தனியேஅழைத்து அச்சொல்லின் செல்வனிடம் நுண்மையான கருத்து ஒன்றைஇராகவன் பேசுவது நமது சிந்தனைக்குரிய ஒன்றாகும். நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற வரம்பு இலாததனை, மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால் அரும்புவ, நலனும், தீங்கும்; ஆதலின், ஐய! நின்போல் பெரும் பொறை அறிவினோரால், நிலையினைப் பெறுவது அம்மா! (4143) இப்பாடலின் ஆழமான பொருளையும் அது பாடப்பட்ட நிலைக்களம், சூழ்நிலை என்பவற்றையும் புரியாமலே பலர் உரையெழுதி |