52

வில் அறம் துறந்து மறைந்து நின்று போரிட வேண்டிய அவல நிலை
ஏற்பட்டது.  'அதனைச் செய்தும் வாழ்கின்றேன்' என்ற சொற்கள் இராகவன்
கழிவிரக்கத்தில் கூறியதாகும்.  இப்பொருளை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள்,
'மனைவியைக் காப்பாற்ற முடியாதவில்லை வைத்துக்கொண்டு இருக்கிறேன்'
என்று கழிவிரக்கத்தில் கூறியதாகப் பொருள் கூறுவர். அச்செயல் தன் கடமை
தவறியதைத் தான் குறிக்கிறான் என்று கூறப்படுமே தவிர, விற்போரில்மேற்
கொள்ள வேண்டிய அறத்தைத் துறந்ததாகக் கூற முடியாது. அன்றியும்,'வில்
அறம் துறந்து வாழ்வேற்கு' என்ற சொற்றொடர் கவனிக்கப்படவேண்டிய
தாகும். துறத்தல் என்றது தன்வினை; எனவே, துறந்தும் என்ற சொல்,
'வில் அறம் எது எனத் தெரிந்தும் வேறு காரணங்களுக்காக அதனை
விட்டுவிட்டேன்' என்ற பொருளைத் தான் தரும்.  ஒரு வீரன் வில் அறம்
துறந்து போர் செய்யவேண்டிய நிலை வந்தால், அவ்வாறு போர் செய்தால்
பின்னர் உயிரை வைத்திருக்கமாட்டான். நானோ இன்னும்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.  அதாவது, 'இல்லறத்தால் இயற்கையை இழந்தது
நானே விரும்பிச் செய்ததன்று; அது என்னையும் மீறி நடைபெற்றது' என்ற
பொருளில் 'இயற்கையைத் துறந்தேன்' என்று கூறாமல் 'இழந்தேன்' என்று
கூறுகிறான் பெருமான்.  வில் அறத்தைப் பொறுத்தமட்டில் தெரிந்தே செய்தது
ஆகலின் துறந்தேன் என்று கூறுகிறான்.

     தன்னொடு செய்த போரில் இராமன் வில் அறம் துறந்தான் என்பது
மெய்ஞ்ஞானம் வருவதற்குமுன்னர்  வாலி பேசும் பேச்சுகளில் இதே
சொற்களில் பேசப்படுவதைக் காணலாம்.

'இல்லறம் துறந்த நம்பி, எம்மனோர்க்காகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால், வேத நல் நூல்
சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும், தொல்லை
நல் அறம் துறந்தது' என்னா, நகை வர நாண் உட்கொண்டான். (4014)

இப்பாடலின் முதலடியில் இராமன் செய்யாததொரு குற்றத்தை இராமன்மீது
வாலி ஏற்றுகிறான். 'இல்லறம் துறந்த நம்பி' என்று கூறும்பொழுதுவேண்டு
மென்றே பிராட்டியைப் பிரிந்தான் என்ற பொருளில் வாலி பேசுகிறான்.
(துறந்த என்ற சொல், தன்வினையாதலின் இவ்வாறு பொருள் கொள்ள
வேண்டும்) 'இல்லறம் இழந்தேன்' என்று இராகவன் கூறுவதற்கும் 'இல்லறம்
துறந்த' என்று வாலி கூறிய பொருளுக்கும் வேறுபாடு அறிய வேண்டும்.
இராமன்மேல் கொண்ட சினத்தால் இழந்தான் என்று கூறாமல் துறந்தான்
என்று கூறுவது அவன் மனநிலையைக் காட்டும்.  ஆனால், அடுத்து வரும்
அடிகள் உண்மையைக் காட்டும், 'எம்