24

விடுகிறது. அதைப் புரிந்துகொண்டஅனுமன் உறங்குகின்ற வீடணனின்
உணர்வுகளோடு (எண்ண அதிர்வுகளோடு) தன்னுடைய உணர்வுகளையும்
ஒத்திட்டபொழுது வீடணன் தூயவன் என்பதை அனுமன்
உணர்ந்துகொள்கிறான். அதன் பயனாகத் தீமையே புரிந்து வாழ்கின்ற
அரக்கரிடையே இப்படியும் ஒருவனா என்று வியக்கின்றான். கள்ளி வயிற்றில்
அகில் பிறப்பதுபோல் (நான்மணி.  6) தீமையே நிறைந்துள்ள இலங்கையில்
தருமம் ஒளித்து வாழ்வதுபோல ஒருவன் வாழ்கிறான் என்று நினைக்கிறான்
அனுமன். இதனைக் கூறவந்த கவிஞன்,

    ஒளித்து வாழ்கின்றதருமம் அன்னான்தனை உற்றான் (4970)
    உற்று நின்று, அவன்உணர்வைத் தன் உணர்வினால்
                                         உணர்ந்தான்
;
    'குற்றம் இல்லது ஓர்குணத்தினன் இவன்' எனக்
                                    கொண்டான் (4971)
என்று கூறுகிறான்.

     மூன்றாவதாக,அனுமன் காண்பது இந்திரசித்தனை ஆகும். அவனைப்
பார்த்த மாத்திரத்தில் அனுமனுடைய மனத்தில் தோன்றிய எண்ண
ஓட்டத்தையும், முடிவையும் கவிஞன் ஒரே பாடலில் கூறிவிடுகிறான்.

  'வளையும் வாள் எயிற்றுஅரக்கனோ ? கணிச்சியான் மகனோ ?-
  அளையில் வாள் அரிஅனையவன் - யாவனோ ? அறியேன்;
  இளைய வீரனும், ஏந்தலும்,இருவரும், பலநாள்
  உளைய உள்ள போர்இவனொடும் உளது' என
                                      உணர்ந்தான் (4975)

என்பது அப்பாடல்ஆகும். இதுவரை அனுமன் கண்ட மூவரையும் அவர்கள்
யாவர் என்றோ, எத்தகைய ஆற்றல் படைத்தவர்கள் என்றோ அறியாமலும்
தன் கூர்த்த மதியால் எடை போட்ட அனுமன் இந்திரசித்தனிடம்
வரும்பொழுது மிக உயர்ந்த நிலையை அடைந்துவிடுகிறான். 'கணிச்சியான்
மகனோ இவன்' என்று ஐயுறுவது நியாயமானதே. ஆனால், முன்பின்
பார்த்திராத ஒருவனை உறங்கும்போது பார்த்துவிட்டு அவனுடைய பலத்தை
எடைபோடுவது என்பது எத்தகைய