25

அறிவில் உயர்ந்தவருக்கும்ஓரளவு இயலாத காரியம் என்றே கூறிவிடலாம்.
அப்படியிருக்க, மூன்றாம், நான்காம் அடிகளில் காணப்பட்ட முடிவிற்கு
எவ்வாறு அனுமனால் வர முடிந்தது ? இராம, இலக்குவரை நன்கு அறிவான்
அனுமன். வாலியை உரங்கழிக்க வல்லவனும், மராமரங்களை ஓர் அம்பால்
துளைக்க வல்லவனும் ஆகிய இராமனையும், சுக்கிரீவனுடைய கோட்டை
மதில்களையும் கதவுகளையும் காலால் எட்டி உதைத்துத் தகர்க்க  வல்லவனும்
ஆகிய இலக்குவனையும் நன்கு அறிவான் அனுமன். ஆனால்,
உறங்குகின்றவனைபற்றியோ அவன் யார் என்பதையோ அவன் வீரச்
செயல்கள் என்ன என்பதுபற்றியோ என்ன வென்று அறியாத அனுமன்
'இராமனும் இலக்குவனும் இவனுடன் பலநாள் போர் புரிய வேண்டியிருக்கும்'
என்ற  முடிவிற்கு எவ்வாறு வந்தான்?

     இந்த நிலையில்இராமன் அனுமனை முதன்முதலில் சந்திக்கும்
சூழ்நிலைபற்றி அறிவது பயனுடைய தாகும். இராமன் யார் என்ற வினாவிற்குத்
தன் தாய் தந்தையர் யாவர், தன் பெயர் யாது, தான் செய்யும் பணி யாது
என்ற விடைகளைத் தந்தான் அனுமன். அவன் கூறிய விடை சாதாரணமாக
யாரும் கூறக் கூடியதேயாகும். அந்த விடையினால் இளையபெருமாள்
கவரப்பட வில்லை யென்றாலும், இராகவன் தேற்றம் உற்று,

     ...  இவனின்ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி,
    'ஆற்றலும், நிறைவும்,கல்வி அமைதியும், அறிவும் என்னும்
    வேற்றுமை இவனோடுஇல்லையாம்... (3767)

என்ற முடிவிற்கு வந்தான்.மேலும் தொடர்ந்து,

  'மாணி ஆம் படிவம் அன்று,மற்று இவன் வடிவம்; மைந்த !
  ஆணி இவ் உலகுக்கு எல்லாம்என்னலாம் ஆற்றற்கு ஏற்ற
  சேண் உயர் பெருமை தன்னைச்சிக்கு அறத் தெளிந்தேன்;
                                          பின்னர்க்
  காணுதி மெய்ம்மை' என்று,தம்பிக்குக் கழறி, கண்ணன் (3769)

கூறி முடிக்கிறான்.அனுமன் பேசிய பத்துச் சொற்களைமட்டும்
வைத்துக்கொண்டு அவனை முற்றிலுமாக அளந்துவிடுகிறான். அந்த இராம
பக்தனாகிய அனுமன் இன்னார் என்றுகூட அறிந்து கொள்ளாத அரக்கனை
எடை போடுவதே வியப்பிற்குரிய தாகும். அதைவிட வியப்பிற்குரியது இராம -
இலக்குவர்கள் இவனுடன்