27

விலக்கல்லன் என்பதனையேஇப்பகுதி காட்டி நிற்கிறது. இவ்வாறு, பாதாதி
கேசம் என வருணிப்பதில் தவறில்லை என்றாலும், இது கூறப்பட்ட இடம்,
சந்தர்ப்பம் என்பவை பொருத்த மில்லாதன ஆகும். அடுத்துள்ள காரணம்
ஒன்று உண்டு. பிரிவுத் துயரில் மூழ்கியிருக்கும் இராகவன் சீதையின் ஒவ்வோர்
உறுப்பையும் நினைந்து வருந்துதல் இயல்பே ஆகும். அதைப் பிறரிடம்
சொல்லி அமைதியடைய இதுவரை வாய்ப்பே இல்லை. உடன் வருபவ னாகிய
இலக்குவனிடம் இவ்வாறு பேசுதல் தகாத தாகும். அடுத்து, சுக்கிரீவனிடம் தன்
மனநிலையைப் பேசலாம் என்றால், சுக்கிரீவன் மன வளர்ச்சியில் இராமனுக்கு
ஐயம் உண்டு. எனவே, அவனிடம் பேசுவதும் பொருத்தம் இல்லை. இந்த
நிலையில் அவன் மனத்தில் நிறைந்து நிற்கும் எண்ண ஓட்டத்திற்கு வடிகாலாக
அனுமன் அமைகிறான். அனுமனின் வளர்ச்சியையும் அறிவுத் திண்மையையும்
அறிந்த இராகவன் இவ்வாறு வருணிப்பதற்கு அனுமனையே இடமாகக்
கொள்கிறான். இதனால் இரண்டு குறைகள் தோன்றுகின்றன. அனுமன்
சுக்கிரீவனுக்கு அமைச்சனே யாயினும் இராமனிடம் தொண்ட னாகவே
பழகுகிறான். அப்படிப்பட்டவனிடம் இவ்வளவு விரிவாகச் சீதையின் அழகை
வருணித்ததால் அனுமனுடைய மனத்தில் ஓர் ஓவியம் படிந்துவிட்டது.
மாதர்நலம் பேணாதவனும் பிரமசாரியுமான அனுமன் மனத்தில் எந்தப்
பெண்ணின் உருவமும் இதுவரை பதிந்ததே இல்லை. எனவே, இராமன் கூறிய
அங்க அடையாளங்கள் அவனுடைய மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன.
நீண்ட காலம் பிரிந்து வெளிநாடு சென்றுவிட்டுத் திரும்பி வருகின்றவர்களை
விமான நிலையத்தில் சந்திக்கச் செல்பவர்கள் அவர்களுடைய படங்களை
வைத்துக் கொண்டு வருபவர்களை  ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல் அனுமன்
மனத்தில் இராகவன் எழுதிய ஓவியத்தோடு மண்டோதரியை ஒப்பிட்டு
விட்டான் அனுமன். பிராட்டியைப் போன்ற அழகும் அவள் போன்ற கற்பின்
திண்மையும் உடைய மண்டோதரியைக் கண்டு பிராட்டியோ என அனுமன்
சந்தேகித்ததில் தவறு ஒன்று மில்லை. ஒரு விநாடி ஐயத்திற்குப் பிறகு எந்த
நிலையிலும் இராகவன் மனைவி இராவணன் அந்தப்புரத்தில் நுழைய மாட்டாள்
என்ற முடிவிற்கு வந்து விட்டான். 'கற்புடைய மகளிர் பிறர் நெஞ்சு புகார்'
என்பதைச் சற்று விரித்துப் பிறர் மனையிலும் புகார் என்னும் முடிவிற்கும்