28

வந்துவிட்டான். எனவே,அறிஞனான அனுமன் மனத்தில் இப்படிப்பட்ட ஐயம்
வரலாமா என்ற ஐயம் தோன்றினால், அதற்குரிய முழுப் பொறுப்பும்
இராமனையே சேரும்.

     இதற்குஅடுத்தபடியாக, இலங்கைவாழ் மக்களின் வாழ்க்கையைக் கூர்ந்து
கவனித்த அனுமன், அந்த நகரத்தின் புறவமைப்பைக் கண்டு "நரகம்
ஒக்குமால் நல்நெடுந்துறக்கம் இந் நகர்க்கு (4848) என்று கூறுகிறான்.
புறவமைப்பில் ஈடுபட்டு இவ்வாறு புகழ்ந்து பேசிய அனுமன் அங்கு வாழ்கின்ற
மக்களின் வாழ்க்கையை மறைந்து நின்று கண்டு அதனை வருணிக்கப்
புகுகின்றான். மூவுலகையும் வென்ற மறவன் தலைநகரில் - தேவர்கள் பணி
செய்யும் தலைநகரில் - மக்களின் இன்ப வாழ்க்கைக்கு ஓர் எல்லை கூற
முடியுமோ?  அதனைக் கூற வந்த கவிஞன் இரு பொருள்படப் பேசுகிறான்.

    அளிக்கும் தேறல்உண்டு, ஆடுநர் பாடுநர் ஆகி,
    களிக்கின்றார்அலால், கவல்கின்றார் ஒருவரைக் காணேன் (4864)

என்பது அனுமன் கூற்றே.மேலாகப் பார்ப்பவர்கட்கு இவர்கள் பெரு
மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் என்ற பொருள்படக் கூறுகிறார். ஆனால், அது
இயற்கையான மகிழ்ச்சியா, செயற்கையான மகிழ்ச்சியா என்ற வினாவிற்கு
விடை தருபவன் போல 'மகிழ்கின்றார்' என்று கூறாமல் 'களிக்கின்றார்' என்று
பேசுகிறான். கம்பநாடன் காலத்தில் களித்தல் என்ற சொல்லுக்கு மது அருந்தி
இன்பம் அடைவதே பொருளாகும். ஒரு வேளை அந்தச் சொல்லுக்குப்
பொருள் இருப்பதை மறந்துவிடுவோமோ என்று கருதி, 'அளிக்கும் தேறல்
உண்டு ஆடுநர் பாடுநர் ஆகிக் களிக்கின்றார்' என்று பொருள் கூறுகிறார்.
எல்லை மீறிய மதுப் பழக்கத்தில் தோன்றும் களிப்புக் காரணமாக இலங்கை
வாழ் அரக்கர்களின் வாழ்க்கை கவலையை மறந்து வாழும் வாழ்க்கையாக
அமைந்துவிட்டதைக் காணமுடிகின்றது.

     நகரம், மக்கள்,குறிப்பிட்ட சில பாத்திரங்கள் ஆகியவற்றை மறைந்து
நின்று காண்கையிலேயே அவ்வவ்வற்றை மிக நுணுக்கமாக கண்டு ஆய்ந்து
ஒரு முடிவுக்கு வரும் சிறப்பை அனுமன் பெற்றிருந்தமையை ஊர் தேடு
படலம் காட்டி நிற்கிறது.

     இக்காண்டத்தின்மூன்றாவது படலமாக அமைந்துள்ளது காட்சிப் படலம்
ஆகும். ஊர் முழுதும் தேடிப் பிராட்டியைக்