இராமனுடையஆற்றலை வாலி வதையிலும் மராமரங்களிலும் கண்ட அனும னுக்குப் பிராட்டியின்இந்தச் சொற்கள் இதுவரை மறைந்திருந்த அவளுடையபுதிய பரிமாணத்தைக் காட்டிப் பொலிவு பெறுகின்றன. சூடாமணிப் படலத்தின்தனிச்சிறப்பாகும் இது. இதே படலத்தில் திருமகளேயானாலும், மானுட உடம்புஎடுத்தால் அதற்கேற்ற வாழ்வே அமைகின்றது என்பதை அறிய ஒருவாய்ப்பும் ஏற்படுகிறது. மனித உணர்ச்சிகள் எப்போதும் ஒரே நிலையில்இருப்பதில்லை. அலைகள் எழுந்து மடங்குவது போல உணர்ச்சிகள் மேல்எழுவதும் கீழ் இழிந்து செல்வதும் இயல்பு. காட்சிப் படலத்தில் பிராட்டியைவைத்தே கவிச்சக்கரவர்த்தி இந்த அற்புதத்தைச் செய்து காட்டுகிறான். மனம்நொந்து மாதவிப் பொதும்பரைத் தேடிச் செல்கின்றபொழுது உணர்ச்சியின் கீழ்இழிந்துபோகும் நிலை அடுத்தபடியாக அனுமனைச் சந்தித்து இராமஇலக்குவர்கள் தன்னைத் தேடி வருகின்றார்கள் என்று உணரும்பொழுது அந்தஉணர்ச்சி மேல் ஓங்குகிறது. அந்த உச்ச கட்டம்தான் என் சொல்லினால்சுடுவேன் என்றது. இந்த உச்ச கட்டம் நீண்ட நேரம் நிலை பெறமுடியாது.மகிழ்ச்சி, துயரம் என்ற எந்த உணர்ச்சியும் உச்ச கட்டத்தில் நீண்டநேரம்இருக்க முடியாது. அதனை அற்புதமாக வெளிப்படுத்துகிறான் கவிச்சக்கரவர்த்தி, பிராட்டியின் இந்த உணர்ச்சியும் உச்சகட்டத்தில் நீண்டநேரம்இருக்க இயலாது. அதனை அற்புதமாக வெளிப்படுத்தும் கவிச் சக்கரவர்த்திபிராட்டியின் இந்த உணர்ச்சி மறுபடியும் கீழிறங்கிச் செல்வதை (5373 - 5387)14 பாடல்களில் விரிவாகப் பேசுகிறான். இதில் 5372 - 5376 வரையுள்ளபாடல்கள் நம்பிக்கை இழந்த மனநிலையைக் காட்டுகின்றன. இதுவரைநடந்தவற்றை யெல்லாம் கூறிய அனுமன், தான் இராமனிடம் சென்றுதகவலைத் தெரிவித்தவுடன் இராமன் வானரப்படையொடு வருவான் எனத்தேற்றியும், பிராட்டி (இந்த ஐந்து பாடல்களில்) நம்பிக்கை இழந்தசெய்திகளைக் காட்டுகிறாள். இன்னும் ஒரு மாதத்தில் வராவிடில் இராமன்மீதுஆணையாக தன் உயிரை விட்டுவிடுவேன் என்றும், தன்னை வந்துமீட்பதற்குரிய தகுதி தனக்கு இல்லையென்றாலும் மனைவியை இழந்து சும்மாஇருந்துவிட்டானென்று அவனுடைய வீரத்தை உலகம் பழிக்காமல்பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இராமன் தன்னை மீட்க வரவில்லைஎன்றாலும் தன்னைக் காத்து நின்ற |