34

இளைய பெருமாளுக்குஇப்பொழுது தன்னை மீட்பது கடமை என்றும்
கூறிக்கொண்டே வருகின்றவள், முற்றிலுமாக மனம் உடைந்து பின்வரும்
பாடலைக் கூறுகிறாள்:

     "திங்கள்ஒன்றின் என் செய்தவம் தீர்ந்ததால்;
     இங்கு வந்திலனேஎனின், யாணர் நீர்க்
     கங்கையாற்றங்கரை, அடியேற்குத், தன்
     செங் கையால்கடன் செய்க" என்று செப்புவாய் (5376)

இவ்வாறு பேசுவதால்அனுமன் வார்த்தைகளிலோ, இராமன் வரவிலோ ஐயம்
கொண்டு பேசினாள் என்று நினைப்பது தவறு. எத்துணை உறுதிப்பாடு
உடையவர்க ளாயினும் மென்மைத் தன்மையுடைய பெண்களுக்கு இத்தகைய
உணர்ச்சிப் போராட்டங்கள் தோன்றுவதும் நம்பிக்கை, நம்பிக்கையின்மை
தோன்றுவதும் இயல்பே ஆகும். சீதையும் இதற்கு விதிவிலக்கல்லன்
என்பதைக் காட்டவும் அவள் துயரம் எத்துணை ஆழமானது என்பதைக்
காட்டவும் கவிஞன் இவ்விடத்தைப் பயன்படுத்துகிறான்.

பெண்களின்மென்மைதன்மை காரணமாகப் பல்வேறு வகையான குழப்பங்கள்
அவர்களுடைய மனத்தில் தோன்றுவது இயல்பு. மாயமான் பின்னே சென்ற
இராகவன் பிராட்டிக்குக் காவலாக இளையவனை வைத்துச் செல்கிறான்.
இராமன் குரலில் 'இலக்குவா' என்ற அபாயக்குரல் கேட்கிறது. இது அரக்கனின்
சூழ்ச்சி என்பதை அறிந்துகொண்ட இலக்குவன், கவலை இல்லாது நிற்கிறான்.
இராமனுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று கலங்கிப்போன பிராட்டி உடனே
இராமனைத் தேடிச் செல்லுமாறு இலக்குவனை ஏவுகிறாள். 'அந்தக்
கமலக்கண்ணனை யாரென்று நீங்கள் அறியவில்லையா ? பதினான்கு
உலகங்களையும்  அழிக்கவல்ல அவனுக்கு யாராலும் தீங்கு ஒன்றும் வராது'
என்று எவ்வளவோ எடுத்துச் சொல்கிறான். எதையும் காதில்
வாங்கிக்கொள்ளாத சீதை, 'இராமனிடம் ஒரு பகல் பழகியவர்கள்கூட
அவனுக்காகத் தம் உயிரைக் கொடுப்பர். அத்தகைய திருமகன் அழிகின்றான்
என்ற செய்தியை அறிந்தும் கொஞ்சமும் துயர் உறாமல் துணிவோடு நிற்கின்ற
இளையவனே ! இனி உன்னிடம் பேசுவதில் பயனில்லை. நான் எரியிடை
மூழ்குவேன்' என்று புறப்பட்டுவிட்டாள் (3331) 'விதிக்கும் விதியாகும் என் வில்
தொழில்' (1735) என்று ஒரு காலத்தில் பேசிய இளையவன் நிகழ்ச்சிகளின்
நடைமுறையைக் கண்டும்