என்றாலும், மெய்யறிவு பெற்றவர்கள்கூடப் பழைய வினைப்பயத்தால் அதனை இழந்துவிடுதல் உண்டு என்பதைப் பல பெரியோர்களின் வரலாறுகள் நமக்கு காட்டுகின்றன. ஆதலால், இந்த வினாடிவரை சமதிருஷ்டியும், மெய்யறிவும் பெற்று, வேத முதற் காரணனை நேரே தரிசித்தும், அவ்வழியில் மேலே தொடரமுடியாதபடி அவனுடைய ஆணவம் தடைசெய்கின்றது. ஆன்மாக்களை மூன்று வகையாகப் பிரிக்கும் சைவசித்தாந்திகள் ஆணவம், கன்மம், மாயை என்ற முக் குற்றங்களையும் உடையவர்கள் சகலர் என்றும், ஆணவம், கன்மம் என்ற இரண்டு குற்றங்களை மட்டும் உடையவர் பிரளயாகலர் என்றும் ஆணவம் மட்டும் உடையவர்கள் விஞ்ஞானகலர் என்றும் கூறுவர். எனவே, மெய்ப்பொருளைத் தரிசனம் செய்துகூட ஆணவத்திலிருந்து விடுபடாமல் |