77   யுத்த காண்டம்

சொல்கிறோமே தவிர அவள் பேசியதைக் கூறும் பாடல்கள்
அப்படி நினைக்க இடம் தரவில்லை.
 

'ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்;
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ
வெருவலை நின்றனை; வேறு என்? யான் இனி,
எரியிடைக்கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு' எனா

(3331)
 

"இராகவனிடம்   ஒரு   பகற்பொழுது   பழகினவர்கள்கூட
அவனுக்காகத்தன் உயிரையே தந்து விடுவர். அவன்பின் பிறந்த
இளையனாகிய நீ அப்பெருமகன் அழிகிறான்   என்ற   செய்தி
அறிந்தும்   உடல்    பதறாமல் நிற்கின்றாய். இது தவிர  நான்
சொல்வதற்கு    வேறு     ஒன்றுமில்லை. தீயில்  மூழ்கி என்
வாழ்நாளை     முடித்துக்கொள்வது தவிர வேறு  வழியில்லை"
என்று    பொருள்படும்    இச்   சொற்கள் அவள் துயரத்தை
அறிவிக்கின்றதே      தவிர     வேறு  இல்லை. பெண் என்ற
காரணத்தால்  இராமனுடைய உண்மை சொரூபத்தை அறியாமல்
அவனுக்கு    கேடு வந்து விட்டது என்று அஞ்சுகிற நிலையில்
'வெருவலை    நின்றனை' என்று பேசுகின்றவளின் மனநிலையை 
கவிஞன்,
 

என்று அவன் இயம்பலும், எடுத்த சீற்றத்தள்
கொன்றன இன்னலள், கொதிக்கும் உள்ளத்தள்
நின்ற நின்நிலை இது, நெறியிற்று அன்று'...........
........................................................................................

(3330)
 

என்ற பாடலில் கூறுகிறான். பொங்கிய  சீற்றமும்,   கொதிக்கும்
உள்ளமும் ஒன்று  சேர்ந்தவழி     அறிவு   அங்கு தொழிற்பட
வில்லை. எனவே இராமனுடைய  உண்மை நிலையை அறியாதது
போலவே   இலக்குவனுடைய  உண்மை நிலையையும் அறியாது
பேசுகிறாள்.   நீ     இப்பொழுது    பதறாமல் நிற்கின்ற நிலை
நன்னெறியில் செய்வோர்கள்  செய்யும்    செயலன்று    என்ற
கருத்தில்     'நின்ற     நின்நிலை  நெறியிற்று அன்று' என்று
பேசிவிட்டாள்.     அரச  குமாரனாகப் பிறந்தும் மனைவியைத்
துறந்தும்     வனத்திடை    வந்து பல ஆண்டுகள் ஊனையும்
உறக்கத்தையும் மறந்து தலைவன் பணி தலைநிற்கும் ஒருவனைப்
பார்த்து அவனுடைய மனநிலையையே ஐயுற்று பேசுபவள் போல
பிராட்டி பேசியது மிகக் கொடுமையானது    தான்,   என்றாலும்,
இவ்வார்த்தைகளைக் கேட்ட இளைய பெருமாள் அவளிடம் சினம்
கொள்ளவில்லை. அதற்கு