79   யுத்த காண்டம்

இளையவனுக்கு     அறிந்தோ அறியாமலோ பெருந்தவறு
இழைத்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு பிராட்டியின் மன
ஆழத்தில் வலுவாகப் பதிந்து விட்டது.
 

குற்ற உணர்வினால் வருந்துகின்ற பிராட்டியின் இளைய
பெருமாளும் விரைவில் சந்தித்து  அயோத்தி சென்று ஒரே
இடத்தில் வாழவேண்டிய சூழ்நிலை   உருவாகிக் கொண்டு
இருக்கிறது. குற்ற உணர்வுடைய ஒருத்தி    எவ்வளவுதான்
மறக்க முயன்றாலும் இலக்குவனைப் பார்க்கும் போதெல்லாம்
அந்த   குற்ற    உணர்வு அவளுடைய மனத்தில் நெருடிக்
கொண்டே        இருக்கும்.     எனவே,     அக்குற்றம்
போகவேண்டுமானால்       இலக்குவனால்   தான்   ஒரு
தண்டனையை   அடைய வேண்டும். அதுவே தான் செய்த
குற்றத்திற்குக் கழுவாய் என்று நினைக்கிறாள் பிராட்டி
 . 

இதனை  நன்கறிந்து  கொண்ட  இராகவன்,  பிராட்டியை
நெருப்பில் விழ    முற்படும் நிலைக்கு   அவளை  ஏசுகிறான்.
நெருப்பில் விழ முடிவுசெய்த பிராட்டி இலக்குவனைப் பார்த்து
'நீ   எனக்கு   நெருப்பு அமைத்து தா! என்று வேண்டுகிறாள்.
நெருப்பு    அமைக்க   வேண்டுமானால் இலங்கை வாசியான
வீடணனை  அல்லவா அவள் கேட்டிருக்க வேண்டும்? அதை
விட்டுவிட்டு இலங்கைக்கு முற்றிலும் புதியவனான இளையவனை
நோக்கி, தீ  அமைத்து தா என்று கேட்பதிலிருந்தே அவனால்
தனக்கு தண்டனைத் தரப்பட்டால் தன் குற்ற   உணர்விலிருந்து
கழுவாய் தேடிக்கொள்ள முடியும் என்று அவள் விரும்புகிறாள்
என்பதை  நன்கு புரிந்துகொள்ள முடியும். அக்னிப் பிரவேசம்
என்ற   இந்த முழுநிகழ்ச்சியும் பிராட்டியின் குற்ற உணர்வைப்
போக்க அறத்தின் மூர்த்தியாகிய இராகவன் நடத்திய நாடகமே
என்பதை நன்கு விளங்கிக் கொள்ளலாம். தீ அமைக்க  என்று
பிராட்டி கேட்டவுடன் நடுங்கிப் போன இலக்குவன், அண்ணன்
முகத்தைப் பார்க்கிறான்.
  

"இளையவன்தனை அழைத்து, 'இருதி, தீ' என,
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்;
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணைத் தொழ, அவன் கண்ணின் கூறினான்

(10029)
 

என்ற இப்பாடலின் 3வது அடியில் உள்ள கண்ணின் கூறினான்
என்ற தொடர், இது ஒரு நாடகம் என்பதை