81   யுத்த காண்டம்

தோன்றிமறையும்  அன்பின் வடிவான  சத்ருக்கனன்  மற்றொரு
பக்கம்  கவரி வீசுகிறான். எனவே  இராமன் என்ற   அறத்தின்
மூர்த்தி  மேலும்,    கீழும்,   பக்கங்களிலும்  அன்பு,  கடமை,
தொண்டு  என்பவற்றால்    சூழப்பட்டுள்ள  ஓர்  உருவகத்தை
இந்த ஒரு பாடலில் கவிஞன் தந்துவிடுகிறான். காந்தி   அடிகள்
கூறிய இராமராஜ்ஜியத்திற்குக் கம்பனை விடச் சிறந்த  விளக்கம்
தந்தவர் வேறுயாரும் இலர். 'அங்கதன் உடைவாள் ஏந்த'  என்ற
தொடர்    மிக    நுட்பமானதாகும். பகை என்று கருதப்பெற்று
கொல்லப்பட்டவனாகிய   வாலியின்  மகன் அங்கதன்  ஆவான்.
அரசனுக்குரிய அதிகாரச் சின்னமாகிய உடைவாள்   பகைவனின்
மகன்    கையில்      சென்றது  என்றால், அதுவும் விரும்பித்
தரப்பெற்றது    என்றால்     இராமன்   ஆட்சியில் வாளுக்கு
வேலையில்லை   என்ற    கருத்தைச் சொல்லாமல் சொல்கிறான்
கவிஞன். உடைவாள் பிடிக்க  என்று   சொல்லாமல், உடைவாள்
ஏந்த என்று கூறியதால் வாளைப் பயன்படுத்தும் நாட்கள் ஒழிந்து
விட்டன.    அது    அலங்காரப் பொருளாக ஏந்தப்பட்டுள்ளது
என்பதைக்     குறிக்கவே    'ஏந்த'    என்ற     சொல்லை
பயன்படுத்துகிறான்       கவிஞன். இந்த ஒரு பாடலில் கம்பன்
கண்ட  இராம   காதையின் முழுச் சிறப்பும் இடம் பெறுவதைக்
காணலாம்.
 

இந்நிகழ்ச்சியை   அடுத்து   இராகவன் பரதனுக்கு இளவரசு
பட்டம்  சூட்டிப் பொறுப்பு முழுவதையும் அவனிடம் தந்துவிட்டு
அமைதியான    வாழ்வு  மேற்கொண்டான் என்ற ஒரு பாடலைக்
கவிஞன் கூறுவது   நம் சிந்தனையைத் தூண்டுகிறது. அப் பாடல்
வருமாறு:-
 

விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை

நோக்கி,

வரதனும், இளைஞற்கு ஆங்கண்மா மணி மகுடம் சூட்டி,

பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து, நாளும்

கரைதெரிவு இலாத போகக் களிப்பினுள் இருந்தான்

மன்னோ

(10331)
 

இப்பாடல்   சற்று வியப்பைத் தருவதாகும். முடிசூடிய சில
நாட்களிலேயே   பரதனுக்கு இளவரசு பட்டம் கட்டவேண்டிய
சூழ்நிலை என்ன வந்தது. அறுபதனாயிரம் ஆண்டுகள் ஆட்சி
செய்த தயரதன் தன் கண்மணி போன்ற இராமனுக்கு இளவரசு
பட்டம் சூட்ட   வேண்டும்    என்று    நினைத்தானே தவிர
உண்மையில் தானாக அதிகாரத்தை