82   யுத்த காண்டம்

விட்டுக் கொடுக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனது
வாழ்வு முழுவதையும் எவ்வாறு கழித்தான் என்பதை இதோ
கம்பன் பேசுகிறான்:
 

ஈந்தே கடந்தான், இரப்போர்கடல்; எண் இல் நூண் நூல்
ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே  கடந்தான்,   பகைவேலை; க ருத்து  முற்றத்
தோய்ந்தே  கடந்தான், திருவின்  தொடர்போக பௌவம்

(172)
 

முதல் மூன்று அடிகளோடு, நான்காவது அடியில் கூறப்பட்ட
பொருள்  இயைபுடையதாகத்   தெரியவில்லை.  முதல்  மூன்று
அடிகளில்  கூறப்பட்ட   கடமைகளை  விடாது செய்த ஒருவன்
எவ்வாறு அறுபதினாயிரம் மனைவியருடன்  இன்ப வெள்ளத்தில்
வாழ முடியும் என்ற வினா தோன்றத்தான்   செய்கிறது. போகக்
கடலில் திளைத்திருந்த ஒருவன் மற்றவற்றில் மனம் செலுத்துவது
இரண்டிலும் முழுத் தன்மை பெறாத ஒரு   நிலையைக் குறிக்கும்.
சீவகனின் தந்தை சச்சந்தன் வரலாறு இதற்கு எடுத்துக்காட்டாகும்.
மேலும் அறுபதினாயிரம் மனைவியருடன்    வாழ்கின்ற ஒருவன்,
இன்ப அன்பு வாழ்க்கையில்கூட முழுவதுமாக   தோய முடியாது.
ஒருவன் - ஒருத்தி என்றிருக்கும் பொழுதுதான் அந்த வாழ்க்கை
முழுத்தன்மை    உடையதாகும்.    அதிலும்    இடையிடையே
அரசனுடைய  கடமைகள் குறிக்கிடுமாயின் அது முழுத்தன்மைப்
பெறாத போக வாழ்க்கையாகும்.
 

இந்த  எண்ண ஓட்டத்தை மனத்திற்கொண்டு இராமனுடைய
வாழ்க்கை    எவ்வாறு அமைந்தது என்று பேசத் துவங்குகிறான்
'விரத நூல்   முனிவன்  சொன்ன' என்ற பாடலில், அமைதியான
இன்ப வாழ்க்கை என்பது இடையூறு அற்றதாக இருக்க வேண்டும்.
அதிகாரம் நிரம்பிய அரச   வாழ்க்கையும் இன்பம் தருவதுதானே
என்று    கூறினால்   அங்கே  ஒரு    பிரச்சனை தோன்றுகிறது.
அதிகாரத்தின்   ஆணிவேர்   'நான்' என்பதாகும்.   இந்த நான்
பெரிதாக    வளர்ந்துள்ள    நிலையில்தான் அதிகார வாழ்க்கை
அனுபவிக்க   முடியும்.   என்றுமே இராமனைப் பொறுத்தமட்டில்
அதிகார    வாழ்வில்  ஈடுபாடு உடையவன் அல்லன் என்பதைக்
'காதல்    உற்றிலன்;     இகழ்ந்திலன்;  'கடன்   இது'   என்று
உணர்ந்தும்............ அப்பணிதலை நின்றான் (1382)  என்ற பாடலில்
கவிஞன் நன்கு எடுத்துக்காட்டியுள்ளான். அரசாட்சி பாரம் எனக்