84   யுத்த காண்டம்

பிறந்த     பிள்ளைகளாவோம்   என்ற  கருத்தில்,  "நின்னில்
தோன்றினோம்   நெறியில்     தோன்றினாய்"  (8812)  என்று
இராகவன்  கூறித் தன் நன்றியைத் தெரிவித்துக்   கொண்டான்.
தந்தையின்     ஸ்தானத்தில்   இருக்கும் ஒருவனுக்கு  எந்தப்
பரிசினைத் தந்தாலும் அது குற்றமாகிவிடும். எனவே, இராகவன்
அனுமனை நோக்கி,
 

"மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின்

நோக்கி,

'ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த

பேர் உதவிக்கு யான் செய் செயல்பிறிது இல்லை:

பைம்பூண்

போர் உதவிய திண்தோளாய்! பொருந்துறப் புல்லுக!'

என்றான்.

(10351)
 

இப்பாடலில் உள்ள  புதுமையையும், நுணுக்கத்தையும்  சிந்திக்க
வேண்டும்.    தமிழ்நாட்டு    மரபுப்படி ஒருவரை ஒருவர்  தழுவும்
பொழுது, தழுவினவர் ஆளுமை மிக்கவர் என்றும்  தழுவப்பட்டவர்
ஒருபடி    குறைந்தவர்    என்றும்    கருதுவது  இயல்பு. இராமன்
அனுமனைத்  தழுவி யிருந்தால் மிகச் சிறப்புடைய செயல்  மரபுக்கு
ஒத்ததாகும். ஆனால், "அனுமனே! நீ என்னைப் பொருந்துறப்புல்லுக!"
என்று பேசுகிறான் கோசல நாடுடை வள்ளல். இன்றுவரை சீதைக்கும்,
இலக்குவனுக்கும், பரதனுக்கும்   உரியனவாக இருந்த அத்தோள்கள்
அவர்களைப் புல்லினவே   தவிர,   அவர்களால் புல்லப்படவில்லை.
தொண்டின் பரிணாமமாக  விளங்கும்   அனுமனைப்   பார்த்து,  நீ
என்னைப் புல்லுக என்று   இராகவன் கூறும்பொழுது, தன்னைவிடத்
தன் நாமத்தையே   ஜெபிக்கும்.    அகங்கார,      மமகாரங்களற்ற
தொண்டனாகிய அனுமனை   ஒருபடி உயர்த்திவிடுகிறான். இராகவன்
பரம்பொருள் ஆதலின்,   தொண்டனை, பக்தனை என்னைப் புல்லுக
என்று சொல்லும் பொழுது  ஒரு தொண்டனின் பிடியில் பரம்பொருள்
அகப்பட்டுக்கொள்ளுகிறான். குறியீட்டு முறையில்   சொல்வதானால்,
பக்தனின்     இருதயத்துக்குள்,    பரம்பொருள்   புகுந்துவிட்டான்
என்பதையே இது குறிக்கிறது.
 

"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே"
 

என்று வள்ளலாரும் "பக்தி வலையிற் படுவோன் காண்க" என்று
மணிவாசகப் பெருந்தகையும் "இறைவனோ தொண்டர்