அரசியற் படலம்115

இரப்போர்கடல்     ஈந்தே கடந்தான் - அவ்வரசன். தன்னிடம்
யாசிப்பவர்கள்  என்னும்  கடலை  ‘ஈதல்’  என்றும்  தெப்பம்கொண்டு
கடந்தான்;அறிவு என்னும் அளக்கர் எண்ணில் நுண்நூல் ஆய்ந்தே
கடந்தான்
-  அறிவு என்ற கடலை. எண்ணற்ற நுண்ணிய நூலாராய்ச்சி
என்ற படகு கொண்டு தாண்டினான்; பகைவேலை வாளால் காய்ந்தே
கடந்தான்
-  பகைவர்கள்  என்ற கடலை. வாள் முதலிய படைத்துணை
கொண்டு. கோபம்காட்டி நீந்தினான்; திருவின்தொடர் போகபௌவம்-
செல்வ  வளத்தாலே  தொடர்ந்து  வரும்  இன்பம்  என்னும் கடலை;
கருத்து முற்றத் தோய்ந்தே  கடந்தான்
-  மனம்  நிறைவு பெறும்படி
துய்த்தே கடந்தான்.

தயரதன்.     தன்னை நாடிவரும் யாசகர்களை முனியாது. கொடுத்து
அனுப்பும்  இயல்புடையவன்.  உயர்ந்த  நூல்களைக்   கற்றுத் தெளிந்த
அறிவுடையவன்.   எத்துணைப்   பகைவர்  திரண்டு   வரினும்  வாள்
கொண்டு.    கோபம்காட்டி.    வெல்லும்     வீறுடையவன்.    உலக
இன்பங்களை-  மனம்  நிறைவுறுமாறு.  துய்த்து  வாழ்ந்தவன்  என்பது
கருத்து.   அளக்கர்.  வேலை.  பௌவம்   என்பன.  கடல்   என்னும்
பொருள்   கொண்ட   ஒரு   பொருட்    பன்மொழி.   பகை:  சாதி
யொருமைப்பெயர்.    பகையரசை     உணர்த்தும்.    இரப்போர்கடல்.
அறிவென்னும்  அளக்கர்.  பகைவேலை.   போக   பௌவம்  என்பன
உருவகங்கள். போக பௌவம் இன்பக் கடல்  என்று பொருள் கொண்ட
வடமொழித் தொடர்.                                        5
 

173.
 

வெள்ளமும். பறவையும். விலங்கும். வேசையர்
உள்ளமும். ஒரு வழி ஓட நின்றவன்;
தள்ள அருப் பெரும் புகழ்த் தயரதப் பெயர்
வள்ளல்; வள உறை அயில் மன்னர் மன்னனே.
 

வள்உறை    அயில்- தோலால் ஆன உறையை உடைய வேலைத்
தாங்கிய;  மன்னர்  மன்னன்-  அரசர்களுக்  கெல்லாம் அரசனாகிய;
தள்ள  அரும்  பெரும்புகழ்
-  நீக்க  முடியாத பெரும்புகழ் படைத்த;
தயரதப்பெயர்  வள்ளல்
-  தயரதன்  என்னும்  பெயருடைய வள்ளல்
ஆட்சியில்;   வெள்ளமும்.   பறவையும்   விலங்கும்   வேசையர்
உள்ளமும்
- வெள்ளப்   பெருக்கும்.   பறவைகளும்.   விலங்குகளும்.
விலைமாதர் உள்ளமும்; ஒருவழி  ஓட நின்றவன் - ஒரேவழியில் தம்
எல்லை கடவாது சென்றன. இவ்வாறு செய்து புகழில் நிலைத்து நின்றான்.

செங்கோலாட்சியால்.    அறம் தவறாது ஆண்டு வருபவன் தயரதச்
சக்கரவர்த்தி  என்பது கருத்து. வெள்ளம் ஒரு வழி  ஓடுதலாவது மழை
மிகுதியாகவும்   பெய்யாது.    குறைவாகவும்   பெய்யாது  அளவோடு
பெய்வதால்  வெள்ளமும்   கரைகடவாது  செல்லுதலாம்;  பறவைகளும்
விலங்குகளும்  பகைமையின்றித்தமக்குரிய  வாழ்விலே  நின்றன. பலரை
நாடிச்   செல்லும்  விலைமாதர்  மனமும்   ஒருவனையே   அடைந்து
விரும்பி  இருக்கும்.  தயரதனது  அறம் கடவாத  ஆட்சியினால் இந்த
அதிசயம் நிகழ்ந்தது என்கிறார்.                               6